சத்தியமே வென்றிடும் சான்று - வெண்பாக்கள்

புத்திவரப் புத்துலகம் பூத்திட நம்நாட்டில்
சித்திமிகுச் சொற்களெல்லாம் சிந்தனைத் தூண்டிட
மொத்தமாக மக்களும் மோதுகின்ற நேரமின்று .
சத்தியமே வென்றிடும் சான்று .


சான்றாகத் தன்னுடைய சாதனையைப் பட்டியல்
ஊன்றாக மக்களு முண்மை அறியவும்
சீண்டுகின்ற பொய்யோர் சிறப்பெல்லாம் மாறிட
மாண்புடைய ஆட்சியே மண் .


மண்ணுலகில் செந்தமிழர் மங்காத ஆட்சியினைத்
திண்ணமெனத் தீட்டுகின்றத் திட்டமெலாம் நற்செயலாம்
கண்கூடப் பார்த்திடலாம் காலத்தின் சோதனையாம்
எண்ணமெலாம் நன்மையே எண்ணு .


எண்ணுகின்ற செய்கையிலே ஏற்றமும் உண்டாகும்
வண்ணமிகு நீண்டகால வாக்காளர் தேர்வுசெய்த
உண்ணுசுவை மிக்குடைய உண்மையான ஆட்சியே
மண்ணுலகில் வேண்டும் மலர்ந்து .


மலர்ந்து தமிழகம் மண்டியிடும் மாண்பால்
பலரும் புகழ்ந்திடவே பன்னாளும் மக்கள்
உலவும் வகைசெய உந்துகின்ற நாளில்
விலகும் அரசாட்சி விந்து .


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (8-Feb-17, 5:02 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 39

மேலே