கயல்களைக் காண இயல்களின் துணை

எதையோ பார்த்து மகிழ்ந்ததவள்
இதழ்கள் போதவில்லை என்று
கண்களிலும் கன்னங்களிலும்
புன்னகையைச் சிதறவிட்டாள்...

புன்னகையைக் கண்டு மகிழ
எனக்கும் கண்கள் போதவில்லையென்று
விரல்களைத் துணைகொண்டேன்
இனிமையான இயல்களை எழுத...

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (8-Feb-17, 7:07 pm)
பார்வை : 57

மேலே