வலிகளைச் சொல்வாயா

பகலவன் வந்திட பறந்திட ஒடும்
பனிகளைச் சுமந்த பசும் புல்லே!
ஒட்டி உறவாடிய பனியை இழந்ததன்
வருத்தம் நிறைந்த வலிகளைச் சொல்வாயா?
பிரிவினை ஆற்றிப் பிழைத்துப்போய்
மகிழ்வுற வாழ்ந்திடும் வழிகளைச் சொல்வாயா?
இப்படிக்கு,
மண்.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (8-Feb-17, 6:27 pm)
பார்வை : 326

மேலே