நாளைக்கென்று நீ விட்டுச்செல்ல விரும்பும் தனம் யாது சொல்வாய் மனிதா
நீ உனக்காக வாழ்ந்து வருவது எதார்த்தம்
பிறருக்காக வாழ எண்ணி செயல்பட்டால்
நீ தியாகி ஆகிடலாம் ,இம்மையில் உன்
பிறப்பிற்கு நீ தரும் அர்த்தம் அதுவே
அப்படியே வாழ்ந்துவிட்டால் அந்த தியாகமே
நீ விட்டுச்செல்லும் மதிப்பிடமுடியா பெருந்தனம்
இப்போது சொல்லு ,நாளை உண்டு என்று
நீ நினைத்தால், எதை நாளைக்கென்று விட்டு செல்வாய் ?
நிலம்,புலன், மற்றும் நகை நட்டு என்ற
பெரும் தனமா இல்லை அழிக்கமுடியா
நீ விட்டுச் செல்லும் அன்பும் தியாகமுமா ?