ஏழையின் வேண்டுதல் - 2

நேர்மையற்றவனென முதலாளிகளாலும், சக ஏழைகளாலும் கலங்கப்பட்ட இந்த ஏழை நீதி வேண்டி நீதிமன்றம் நாடினேன்...
அங்கு நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருந்தது....
என்ன செய்வதென்று அறியாமல் ஒரு வழக்கறிஞரை நாடினேன்....
வழக்கறிஞர் நீதியை வாங்கித் தர கேட்ட விலையோ, என்னால் என்றுமே தர இயலாததாக இருக்கவே, என் நிலைமையை வழக்கறிஞரிடம் முறையிட்டபோது, சிறிதும் மனமிரங்காமல், வெளியே போடா பரதேசியென்றே கழுத்தைப் பிடித்தே வெளியே தள்ளப்பட்டேன் வழக்கறிஞரால்.....

நீதியால் புறக்கணிக்கப்பட்ட இந்த ஏழை எங்கே செல்வதென்றறியாமல் அங்கேயே உட்கார்ந்திருந்தேன்...
பசி மேலிட கண்கள் இருண்டன....
அவ்வேளையில் பக்கத்து அறையில் பேசும் குரல்கள் கேட்கச் சற்றே எழுந்து எட்டிப் பார்த்தேன்....
பிரபலமான அந்த மனிதரிடம் நீதிபதி நீதியை, நிதிக்காக விலைப் பேசிக்கொண்டிருந்தார்..

அப்போது தான் புரிந்தது, நீதி தேவதையின் கண்கள் ஏன் கட்டப்பட்டிருக்கின்றனவென்று???...

ஒரு வேளை நீதி தேவதையின் கண்கள் திறக்கப்பட்டிருந்தால், முதல் குற்றவாளியாக நீதியரசரான நீதிபதியே தண்டிக்கப்படுவார்.....

யாவும் ஊழலால் நிரம்பி வழிவதைக் கண்டே, ஏழையானவனிவன் என்ன செய்கேனோ??

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (11-Feb-17, 10:25 am)
பார்வை : 730

மேலே