ஏழையின் வேண்டுதல்

தினமும் பசிக்கும் வயிற்றின் பசித்தீர்க்க வேண்டுமென நாளும் முதலாளிகளிட்ட கட்டளையெல்லாம் நிறைவேற்றிவிட்டு,
கொடுத்த சொற்பப்பணத்தைக் கூலியாகப் பெற்று அன்றாட வாழ்க்கை வாழும் போது,
இடையிலுள்ளவர்கள் வழுச்சண்டைக்கு வருகிறார்கள் ஒன்றுமில்லாதவனிவன் எப்படி நிம்மதியோடு வாழலாமென?....

அனைத்திற்கும் முதலாளியான உண்மை பரம்பொருளானவன் நீ கண்மூடிவிட்டாயோ??...
ஒரு ஏழை வாழ, வாழ்வில் முன்னேற முதலாளிகளுக்குத் தான் பொறுக்கவில்லையென்றால், கூட வாழும் ஏழைக்குக் கூட இந்த உலகில் பொறுக்கவில்லையே.....

விஷமம் நிறைந்த மனங்களையே காண்கிறேன்...
நேர்மையானவன் என்றுமே ஏழையாகவே இருக்க வேண்டும் போல்....

பணம் தான் ஏழையின் பிரச்சனையென்றால்,
அவனது நேர்மையின் மீதும் கலங்கம் கற்பித்து, ஏழையின் நிம்மதியைக் கெடுக்கும் கூட்டம் கூண்டு அழிவதெப்போ???...

சகலத்திற்கும் சாட்சியான உண்மைப் பரஞ்சுடரே, நீ வந்து சாட்சி சொல்லாயோ????...
ஏழையவன் நேர்மையானவன் என்று சாட்சி சொல்லாயோ????...
இப்போதும் வாய்மூடி மௌனமாக எனக்கெனவென்றிருப்பாயெனில் நாளும் நீயே சாட்சியென நேர்மையாக வாழும் மானிடர்களின் மனம் உன்மீது கொண்ட நம்பிக்கையை இழக்காதோ??????...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (11-Feb-17, 9:49 am)
Tanglish : yezhaiyin venduthal
பார்வை : 610

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே