பெண்ணின் அழகு
எழுத்து தளத்தில் அறிவிக்கப்பட்டு "கொடுத்த தலைப்பில்" கவிதைப் போட்டிக்காக அனுப்பட்ட கவிதை..
பெண்களின் அழகு!
அழகென்ற வார்த்தையே பெண்ணுக்குத்தான் பொருந்தும்
அழகில்லையெனில் “அவள்” என்று ஆரும்சொல்லார்!
அழகை வர்ணிக்கா கவிஞருமில்லை!
அழகுப் பெண்ணை விரும்பாத ஆடவனுமில்லை!
கன்னியவள் விழிகள் வளைகின்றபோதில்..
கவிஞன் அவளை முழுமதியென்கிறான்!
ஆயிரம் நட்சந்திரங்களில்..
அபூர்வ நட்சத்திரமென்று..
விஞ்ஞானிகள் ஒருநட்சத்திரத்தை கண்டனர்..நானோ
ஜன்னலில் ஓர்அழகினழகை அரிதாகக்கண்டேன்.
காமன் விடும் கணைபோல உன்..
கண்களிரண்டும் விடும்பார்வையில்..
தையல் உன்னழகுக்கென்றும் நானடிமையாவேன்! உன்..
காதல் சரித்திரம் வாழ்நாள்முழுதும் படித்திடுவேன்..
காதல் உணர்வெனும் போதையிலே..
காலம் பூரா மயங்கியிருப்பேன்.. உன்னழகின்மீது!
அழகாய் உன்னைப் படைத்த தினாலெனக்கு
அடிமை வாழ்க்கை நிலையானதே..
காதலினால் மனிதருக்குக் கவிதையுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர்! மானுடரே!