கவிதை எழுவது தண்டனைக்குரிய குற்றம்
கவிதை ஒன்றை பிடித்து கழுத்து நெரித்து கொலை செய்யவேண்டும்..
நாக்கு வெளித்தள்ளி.. துடிக்க துடிக்க கதறும் கவிதையைப் பார்த்து நான் ரசிக்க வேண்டும்..
எனக்கு ஒரு முற்றுப் புள்ளி வேண்டும், அதை உருட்டி ஊதிப் பெரிதாக்கி கவிதையின் ஆரம்பத்தில் வைக்கப்போகிறேன்..
என் தேசத்தில் யாரும் கவிதைகளை பிரசவிக்கக் கூடாது..
பெரிய துப்பாக்கி ஒன்று வேண்டும்
நிலவைச் சுட்டு வீழ்த்தி பொரித்து உண்னப்போகிறேன்..
இனி கவிதைக்கு நிலவு இருக்க கூடாது..
பூக்களை கைதுசெய்ய தனிச்சட்டம் வேண்டும்..
அழகாய் பூத்தால் ஆயிரம் ஆண்டுகள்..
இன்று முதல் புண்னகை வரியும் அமுலுக்கு வருகிறது..
மன்னா! உன் கெடுபிடிகள் கண்டு காதலும் பெண்ணியமும் தலைதெறிக்க தேசத்தை விட்டே ஓடிவிட்டார்கள்..
நல்லது.. மீண்டும் வர தடை விதி..
ஆனால் மன்னா!..
ஆனால் என்ன??..
இவை எதுவும் இல்லாமல் ஒருவன் கவிதை எழுதுகிறான்..
அவனை பின்நவீன படுகுழியில் தள்ளிவிடுங்கள் அங்கேயே கிடந்து செத்து மடியட்டும்..