வயல்வெளிகளில்

வயல் வெளிகளிலே...... கவிதை

‘உழுவோர்
உலகத்தாருக்கு ஆணி’
உழைப்பின் பெருமையை
உணர்த்திய உழவர்கள்
நெற்றி வியர்வை சிந்தி
நிலத்தை
பண்படுத்தி மகிழ்ந்தது
பசுமை காணும்
வயல் வெளிகளிலே !

குயில்கள் கூவி மகிழ்வதும்
கொக்குகள் பறந்து நிற்பதும்
நண்டுகள், வண்டுகள்
வட்டமிடுவதும்
கயல்கள் துள்ளி
விளையாடுவதும்
பசுமை காணும்
வயல் வெளிகளிலே !

நெற்கதிர்கள்
தலை கவிழ்வதும்
சோளக்கதிர்கள்
நிமிர்ந்து நிற்பதும்
பூச்செடிகள்
பூத்துக் குலுங்குவதும்
கரும்புகள்
தோகையை விரிப்பதும்
பசுமை காணும்
வயல் வெளிகளிலே !

கஞ்சிக் கலயம் சுமக்கும்
களையெடுக்கும் பெண்கள்
களைப்புத் தெரியாமல்
இட்டுக்கட்டிப் பாட்டுப்பாடியதும்
பசுமை காணும்
வயல் வெளிகளிலே !

கிராமக் காதலர்கள்
கிளியுடன்
கொஞ்சிக் குலாவி
விளையாடி மகிழ்ந்ததும்
அன்புள்ளங்கள் ஆடிப் பாடி
பண்புடன் பழகி மகிழ்ந்ததும்
பசுமை காணும்
வயல் வெளிகளிலே !

அழகற்று இருந்தாலும்
மனிதனுக்கு
ஆயிரம் கவலைகள் இருந்தாலும்
படிப்பில்லாத பாமரனும்
பார்த்து ரசித்து மகிழ்ந்ததும்
பசுமை காணும்
வயல் வெளிகளிலே !

அயல்நாட்டிற்கு பறந்தாலும்
உள்நாட்டில் வாழ்ந்தாலும்
உயிர்த் துடிப்புடன் இருக்க
உலகம்
நிற்காமல் சுழல்வதும்
பசுமை காணும்
வயல் வெளிகளாலே !

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (11-Feb-17, 7:03 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 176

மேலே