காதல்காரன்

விண்மீன் தோட்டத்திலே
நிலவாய் பூத்திருப்பவளே.
உன் விழிகளால்
என்னை வேட்டையாடாதே.
முதல் பார்வையிலே
நான் முற்றிலும்
சிறையிடப்பட்டேன்.
உன் வாசத்தை
சுவாசிக்காமல் நான்
ஏழையாகிப்போனேன்.
உன்
சிரிப்புகளையாவது
செலவழித்துவிடு!
நான்
சேகரிக்க வேண்டும்.
செலவழிப்பது நீயாக
இருந்தாலும்
செல்வந்தனாவது
நானாக இருப்பேன்....