சினம்
இரத்தம் சூடேரி சித்தம் மாறுவது சினமா
உணர்ச்சி கைமீறி உலரி கொட்டுவது சினமா
கட்டுப்பாட்டைமீறி கண்ணியத்தை இழப்பது சினமா
மலையளவு நோக்கி கடுகளவும் இயலாமல்
மனதில் கோட்டை கட்டியதால் சினமா
கோபமே... நீகொண்ட கொள்கை என்ன?
யாது கொள்கையென விளம்பிய மானிடா
எனது நோக்கம் யாதென கேள்
படிக்கும் பருவத்தில் பாழாய் போகும்
மானவரை மாற்ற ஆசிரியர் மனதில்
எரிதனலாய் பிறந்தேன்
பாரத தாயின் விழங்கை உடைக்க
தியாகிகள் மனதில் தீபமாய் வளர்ந்தேன்
மதுரையை எரித்த மாநாய்கன்
மகளின் கற்பாய் இருந்தேன்
பண்பாடுமீது பற்றுதல் கொண்ட
இளைஞர்கள் மனதில் எழுச்சியாய் நின்றேன்
மதனை எரித்த சிவனின்
சினமும் எந்தன் குணமே
அரசியல் இன்று அவலமாய் மாறி
அல்லல்படும் வேளையில்
வாக்காளன் கையின் வாக்குச்சீட்டாய் மாற
முயன்றே தோற்றேன்
நல்லவன் உன்னை வள்ளுவன் ஏனோ
சேர்ந்தாரைக் கொல்லி சினம் என
நிந்தித்தல் முறையோ
ஆம்.. அல்லவர் என்னை
ஆட்கொன்டதலே வள்ளுவரிடம் வசைமொழியானென்
அல்லல் கண்டு அவலம் நீக்க
உணர்ச்சி பொங்கி உரிமை மீட்க
நல்லவர் தன்னில் பாரதி பழகிய
ரெளத்திரம் தானே எனது சுயமே.