நீ என்னுடன் வாழ மறுப்பது எதற்காக.
அன்பே
பூக்கள் மலர்வது உன் வருகைக்காக
அது வாடுவது உன் பிரிவுக்காக!
சூரியன் உதிர்ப்பது உன்னை காண்பதற்காக
அது மறைவது உன்னை காணாத ஏக்கத்திர்காக!
வெண்ணிலவு தோன்றுவது உன்னை பார்ப்பதற்காக
அது அம்மவாசையாய் போனது
உன் அழகில் தோற்றத்திற்காக!
தென்றல் வீசுவது நீ சுவாசிப்பதற்காக
அது புயலாய் மாறியது நீ சுவாசிக்க வில்லை என்பதற்காக
என் இதயத்தில் கவிதை பிறப்பது உன்னை நேசிப்பதற்காக
நீ மட்டும் அதை ரசிக்க மறுப்பது எதற்காக
இந்த
உலகம் பிறந்தது நம் இருவருக்காக
இதில் நீ என்னுடன் வாழ மறுப்பது எதற்காக.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
