காதல் பழக வா-8
காதல் பழக வா-8
பொம்மையென்று நினைத்து கொண்டா
உன் தாளத்திற்கு எனை
ஆட வைத்தாய்....
அறியா மடையன் நீயென
புரியாமலே புன்னகைத்து கொள்கிறாய்
உன் வெற்றியை எண்ணி....
திட்டம் போட தெரிந்த
உனக்கு என்றுமே கை வந்து
சேர போவதில்லை காதல்...
உன் மனையாழினியாய் எனை மனம்
முடித்து கொணர்ந்து வந்த உனக்கு
நான் எதிராளியென புரிந்திட
நேரும்போது தோற்று நிற்பாய்
என் முன்னிலையில்....
"ராதியின் முகத்தில் தண்ணீரை தெளித்தும் ராதிகண்விழிக்காததில் ராமாவிற்கு பயம் எக்கச்சக்கமாக எகிறி இருந்தது, கண்ணா என்னப்பா இது, இந்த பொண்ணு தண்ணி தெளிச்சப்புறம் கூட எழுந்திரிக்காம இருக்காளே, டாக்டருக்கு போன் பண்ணுப்பா, எனக்கு ரொம்ப பயமா இருக்கு"
கண்ணனுக்கும் ராதியின் மயங்கிய நிலை சிறிது பயத்தை ஏற்படுத்த டாக்டரை கூப்பிட போனில் நம்பரை அழுத்திய வேலை ரதி மயக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவுக்கு வந்தாள்....
வழக்கம் போல மயக்கம் அடைந்தவர்களின் முதல் டயலாக் நான் எங்கே இருக்கிறேன், அதே தான் ரதியின் முதல் கேள்வியாய் இருந்தது.....
அவள் எங்கே இருக்கிறாள், தனக்கு எப்பேர்ப்பட்ட அநீதி நடந்திருக்கிறது, தன் லட்சிய வாழ்வை ஒரே நிமிடத்தில் கலைத்தவன் தன் முன்னாலேயே நிற்கிறான் என்பதெல்லாம் சற்று நேரத்திற்கு புரியாத புதிராக தான் ராதிக்கு இருந்தது....
சிறிது தண்ணீரை குடித்து தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்ட பின் தான் கோவிலில் நடந்ததும், தன்னை தன் விருப்பம் இல்லாமலே ஒருவன் மனைவியாக்கி கொணர்ந்து கொண்டு வந்திருப்பதும் அவளுக்கு புரிந்தது...
அவள் அடுத்ததாக பேச வாய் எடுக்கும் நொடியில் ராதியின் அம்மாவும், அப்பாவும் அங்கு வந்து சேர, ராதியின் மௌன நிலையே அவர்களின் கோவத்திற்கு தூண்டுதலாகி போனது....
ஏற்கனவே அவமானப்பட்ட எரிச்சல், தன் மகளே தன்னை ஏமாற்றிய வெறுப்பு எல்லாம் சேர்ந்து வினோவை பத்ரகாளியாய் உருமாற்றி இருக்க, வந்த வேகத்தில் ராதியை நெருங்கி பளார் பளார் என கன்னங்கள் சிவக்க அடித்து தன் ஒட்டு மொத்த கோபத்தையும் ராதியின் மேல் இறக்கி கொண்டிருக்க சுற்றி இருந்தவர்கள் சிலையென அதிர்ந்து நின்றனர்.....
"ஏண்டி இப்படி பண்ண, ஆயிரம் முறை சொல்லிருப்பேனே, உன்ன நம்பி கூட்டிட்டு போனதுக்கு என் முகத்துல கரிய பூசி அசிங்கப்படுத்திட்டேயே, காதல் தான் உனக்கு முக்கியமா போச்சில்ல, எத்தனை முறை கேட்ருப்பேன், அந்த பையன லவ் பண்ணினாயானு, நல்லவை மாதிரியே இல்லமா, நான் காதலிக்கவே இல்ல, காதலுக்கும் எனக்கும் சம்மந்தமே இல்ல, எனக்கு என் வேலை தான் முக்கியம், என்ன நம்புங்கம்மான்னு நாடகம் ஆடிட்டு இப்ப உன் சுயரூபத்தை காட்டிடேயே, இத தான் செய்வேன்னு சொல்லிருந்தா உன்ன கூட்டிட்டுபோய் அவங்க முன்னாடி அசிங்கப்படாமலாவது இருந்திருப்பேன், என்ன நம்பவச்சி ஏமாத்திட்டயே, இனி நீ எனக்கு பொண்ணே இல்ல, உன்ன நான் மறந்துட்டேன், நீயும் எங்களை மறந்துடு"
கோவத்தை தகிக்கும் வார்த்தைகளில் கொட்டி கொண்டிருந்த வினோவின் ஒவ்வொரு வார்த்தையும் கண்ணனுக்கு சாதகமான வழிகளை ஏற்படுத்தி கொண்டிருந்தது...
'அம்மா, அப்டிலாம் இல்லமா, இவன் யாருமே தெரியல, இந்த கல்யாணம் எனக்கு பிடிக்காம நடந்தது தான், என்ன இங்க இருந்து கூட்டிட்டு போங்கம்மா' இப்படி அலறி கத்த தான் ராதையும் நினைத்தாள்...ஆனால் ஏற்கனவே பலவீனமாகி இருந்த உடலும் உள்ளமும் வினோவின் கோவத்தாலும் சிவக்க சிவக்க கன்னங்களில் அறையப்பட்ட வலியினாலும் ராதியால் நிற்கக்கூட தெம்பில்லாமல் போக அவள் நாவோ மோவாயில் ஒட்டிக்கொண்டு பேச மறுத்துவிட்டது....
சரி கண்ணனாவது நடந்ததை கூறி இந்த பிரச்சனையிலிருந்து தன்னை விடுவிப்பான் என்று ராதிக்கு இருந்த ஒரு சதவீத நம்பிக்கையும் கண்ணனின் வார்த்தையிலிருந்து தவிடுபொடியானது....
"இங்க பாருங்க அத்தை, நானும் அவளும் காதலிச்சோம், எவ்ளோ சொல்லியும் நீங்க புரிஞ்சிகிட்டு மாதிரி தெரியல, அதான் இப்படி அவசரமா கல்யாணம் பண்ணிக்க வேண்டியதா போச்சு, இதுக்கு மேல நீங்க எதுவும் பேச வேண்டாம், இப்போ அவ என் மனைவி, அவளை அடிக்கிற வேலைலாம் இனி வேண்டாம், உங்க கோபத்தை விட்டுட்டு எங்களுக்கு ஆசிர்வாதம் பண்ணி முறைப்படி என்ன செய்யணுமோ அத செய்ங்க"
அவ்வளவு தான், வினோவின் கோபம் எல்லையை கடந்துவிட்டது...
"என்னது, முறைப்படி எல்லாத்தையும் செய்யணுமா, உங்களுக்கு ஆசிர்வாதம் பண்ணி ஆரத்தி எடுக்க நான் ஒன்னும் வரல, இனி இவ என்க பொண்ணே இல்ல,காதல் தான் பெருசுனு உன் பின்னாடி வந்தாலே இனி அவ வாழ்க்கையை பத்தி நாங்க யோசிக்க கூட போறதில்ல, அவளை பத்தி கவலைப்பட போறதும் இல்ல, அத்தை மாமான்னு உறவு சொல்லிக்கிட்டு நீயோ, அம்மா அப்பான்னு உறவு சொல்லிட்டு உன் பொண்டாட்டியோ எங்க வீட்டுட்டு முன்னாடி வந்துடாதீங்க, அப்புறம் மரியாதை தர மாட்டோம், போலீஸ்ல கம்பளைண்ட் தான் தருவோம், ஜாக்கரத்தை, வாங்க போகலாம்...இப்படி ஒரு நம்பிக்கை துரோகிகிட்டே இனி என்ன பேச வேண்டி இருக்கு"
இந்த விஷயத்தில் ராமநாதனால் ராதிக்கு உதவியாய் எதுவும் செய்ய முடியவில்லை, அவருக்கும் கோபம் தான், தன்னிடமாவது இதை பற்றி சொல்லிருந்தால் அப்பாவாக இருந்து தன் கடமையை செய்திருப்பேன், என் மேல் கூட என் பெண்ணிற்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதா, வினோ கோபப்பட்டாலும் அவள் பக்கம் நியாயம் இருக்கிறதே, பார்த்து பார்த்து வளர்த்த பெண் இப்படி பெற்றவர்களை ஒதுக்கிவிட்டு கல்யாண கோலத்தில் நின்றாள் எந்த தாய் தாங்கி கொள்வாள், இத்தனை தூரம் வினோ பேசியும் ராதி பேச்சுக்கு கூட 'அப்படி இல்லமா,என்ன மன்னிச்சிடுங்க'னு தன் சூழ்நிலையை கூட விளக்கமா மௌனமா இருக்காளே....அப்போ ராதி தெரிஞ்சே தான் எல்லாத்தையும் செஞ்சிருக்க, அவளுக்கு அப்பா அம்மாவை விட காதல் மட்டும் தான் பெருசா போச்சி, இனி வினோவிடம் ராதிக்காக வாதிடுவதை செய்வதை விட வினோவை சமாதானம் செய்தது இந்த சூழ்நிலையிலிருந்து காப்பதே மேல் என்று தோன்ற எதுவும் பேசாமல் வினோவை அங்கிருந்து அழைத்து கொண்டு போய்விட்டார்...
எல்லாவற்றையும் இயலாமையோடு பார்த்துக்கொண்டிருந்த ராதியால் அப்போதைக்கு அழ மட்டுமே முடிந்தது....அவள் உடலில் தேங்கியிருந்த வழியை விட மனத்தில் அழுத்தி கொண்டிருந்த வலியே அதிகமான வேதனையை கொடுத்தது.....
கண்ணனுக்கோ விதியின் விளையாட்டு வேறு விதமாக அவனுக்கே போக்கு காட்டி இழுத்து செல்ல போவது தெரியாமல் இல்லாமல் தான் நினைத்ததை சாதித்துவிட்ட நினைப்பில் எந்த வித சலனமும் நின்றுகொண்டிருந்தான்......