எழுசீர்ச் சந்தக் கலிவிருத்தம் - வாழ்வினில் எளிமை வேண்டும்

கனவி லேயினிமை யாது மேதனிமை
----- காணு மேதரமு(ம்) தாழ்விலே .
நனவி லேயுறவு மாக வேயுலகை
------ நாட வேபலனு மாகிடும் .
வினவ வேவழியு மாகி டானிலையை
-------- வீர மேயெனலை நீங்கவே !
எனவு மேநெறியை ஏகி டாமுறையை
-------- ஏற னாலிளிமை வாழ்விலே !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (15-Feb-17, 8:37 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 68

மேலே