போய் வா பனிக்காலமே

என்னைச் சுற்றியுள்ள
முள்மரக் காட்டில் படர்ந்து
ஒப்பனைத்து அழகாக்கிய
வானின் வெண்பனியே!

அறிவாயா நீ!
நெறிஞ்சி முள்போன்ற என்
நெஞ்சத்திலும் படர்ந்து
இன்பம் பயக்கும் பெண்பனியை.

வேப்பமரக் குயில்கூவிய
இசையில் இணைந்துவந்து
என் செவிப்பறையை
செழிப்பாக்கிய வெண்பனியே!

அறிவாயா நீ!
குரலில் இனிமைகலந்து
என் நெஞ்சத்தையும் இதமாக்கி
இசைத்துவிட்ட மென்பனியை…

நீ எனைவிட்டுப் பிரியும்
வெயில் காலம் வந்துவிட்டது.
உன்னிடம் விடைகொடுத்து அனுப்புகிறேன்!
எப்படியும் மீண்டும் வந்துவிடுவாய்.

என்னால் உறுதியாய்ச் சொல்ல இயலாது.
நீ மீண்டும் எனைச் சந்திக்க வரும் வேளையில்
உன்குளிருடன் என்னை நனைத்துச்செல்லும்
அந்த பெண்பனி என் அருகில் இருப்பாளா என்று?

ஒருவேளை அவள் என் அருகில்
இல்லாமல் இருந்தால் என்னை நனைத்து
அவள் நினைவுகளைக் கொடுத்துவிடாதே!
எப்படியும் மறந்திருக்கமாட்டேன் இருந்தும்
அவள் நினைவுகளைக் கொடுத்துவிடாதே!

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (19-Feb-17, 4:21 pm)
பார்வை : 257

புதிய படைப்புகள்

மேலே