அப்படி நினைத்துவிடாதே
![](https://eluthu.com/images/loading.gif)
ஒருபக்கமாக
தனித்து
வாழும் எந்தன்
மறுபக்கம்
என்றும்
இனித்ததே இல்லை.....
உன் துன்பம்
அறியாத
தெரியாத
நிலையில்
நானும் இல்லை.......
உன்னை
அரவணைத்துப்
போகமுடியாத
அந்நிய
தேசத்தில்
சந்தோசம்
தொலைத்து......
பொருளாதார
தேடலில்
உணர்வுகளை
தொலைத்த
ஜடமாய்
இறுகிப்போனது
மனசு.....
பணத்தின் மீது
பக்தி
இல்லை.....
என்னைச்
சுற்றி.....கடவுளும்
காணிக்கை
சேர்க்கிறான்.....
இப்போது
அவன்மீதும்
பக்தி
இல்லை......
கரையேறமுடியாத
தேசத்தில்
கண்கலங்கி
நின்றேன்.....
கரையேறிட
கையில் சேரும்
சிறு
துரும்பு வரும்வரை.....!!!