ஆதலால் வா, பழமையிற்தொடங்கி புதுமையில் முடிக்கலாம்
![](https://eluthu.com/images/loading.gif)
ஆதலால் வா, பழமையிற்தொடங்கி புதுமையில் முடிக்கலாம்
=============================================
தோளில் தலைச்சாய்த்தபடி
என்னையா பார்க்கிறாய் என்பதைப்போல
பார்த்துக்கொண்டிருக்கும்
உன் கண்களுக்காக
இந்த வரி
தொந்தரவில்லாதவரை, எதையும் தடுக்கவேண்டாம்
வரட்டும்ம் விடு ம்ம்
மனம், சன்னமாகி, மாதுரப் புகையாகி
அடுமனையில்
சமையலாகி
பீத்தோவனின் சிம்பொனியுமாகி
சடுதியில்
புன்னகையாகி
நிபந்தனையற்ற பரிமாற்றங்களாகி
கருவாகி உருவாகி
அறுதியில்
உனக்குப்பிடித்த உயிராகி
நிழற்படவியிலும்,
பயனியின், ஒளிப்பதிவியிலும் படர
எப்போதாவது
பேசிக்கொண்டிருப்போம்
தொடர்பை
துண்டிப்பதாகச் சொல்லிவிட்டு
நொடிக்கொரு முறையென எத்தனை முறை அழைப்பாய்
என் மென்சோம்பேறித்தனங்கள்
வளர்ந்து நிற்கும்
நகங்களை
வெட்டமாட்டேன் என்று அடம் செயகிறன்றன
ஓயாமற்பெய்துக்கொண்டிருக்கும்
கார்மழைக் காலங்களில்
குளிர் அணைக்க இடமிருக்காது அறிவாயா
ஆடையே இல்லாமல்
கம்பிளியை, கழுத்தோடு அணைத்துக்கொண்டு
ப்ரியமானவர்களிடம்
பேசும் மனநிலை
இப்படி எப்போதாவது அமையும்போது
பல்லே விளக்காமல்
முனங்கிக் கொண்டிருக்கும் ம்ம்ம் ங்களிலிருந்து
செவ்வந்திப் பூக்களுடைய
சாக்லைட் சுவை உருகும் தானே
இது உன் வகை
ஆதலால் வா, பழமையிற்தொடங்கி புதுமையில் முடிக்கலாம்
ஒட்டவெட்டாத மீசையை
தளிரிதழ்களாலொதுக்கி யௌவ்வனம் விதைப்பதைப்போல
பவ்வியம் செய்துக்கொள்
என்னுடன்
அந்த நிமிடங்களைக் கடந்துவிட்ட எல்லோருக்கும்
நான் காதலன் இல்லை
நான் தேர்ட் ரைட்டட் இல்லை
துளிர்விடும், பார்வை சுனாமியால்
உனக்குள்ளில்
என்னை, ஒரு ஓரத்தில் தள்ளிவிட்டு
இப்போது
காதலிப்பதாகச் சொல்லி
அடுத்தடுத்தே
முளைவிட்டுக்கொண்டிருக்கும்
உன் ப்ரியங்களின் இதழ்களைக் கிள்ளிப்பார்க்கும்
சுயநலவாதி என்னை
எனப்பெயர்ச் சொல்லி அழைக்கப் போகிறாய்
பூக்காரன் கவிதைகள்