ஆண்டவன்

ஆண்டவன் நினைத்தான்,தானே
ஆண்டவன் என்று!
ஆண்டவனுக்குத் தெரியும்,இவன்,
மாண்டவன் ஆவான் என்று,
ஆண்டவனின் என்னம்,தான்
நிரந்தரம் என்று!
ஆண்டவனுக்கு மட்டும் தெரியும்,
இது சொற்ப காலமென்று,
ஆண்டவன் வகுத்திட்ட சட்டம் யாவும்
அவனுக்கானது!
ஆண்டவன் வகுத்த சட்டமோ
மாறாததொன்று..,
ஆண்டவனுக்கு தெரியாது
அழிந்தவன் கணக்கு,அந்த,
ஆண்டவனுக்கே வெளிச்சம்
அவன் போடும் கணக்கு!
#sof_sekar