அமர காதல்

இன்னுமோர் மானிட ஜென்மம் எடுத்தாலும்
கண்ணா உன் நினைவே என் மனதில்
உறுதியாய் வந்திருத்தல் வேண்டும்
நாந்தான் உன் காதலியாய் இருத்தல் வேண்டும்
இப்படித்தான் என் மன்னா உன் நினைவில்
நான் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்
உன் பிரிவு என்னை அனலாய் வாட்டிடினும்
நம் மாறா உண்மைக்காதல் எப்போதும்
குளிர்க் காற்றாய் , தென்றலாய் வந்து
உன் பிரிவெனும் காதல் வலியைப்
போக்கும் நல்ல மருத்துவனாய் மாறிவிடுது
யுகங்கள் மாறிடலாம், அழிந்திடலாம் ஆனால்
நம் காதலுக்கு அழிவில்லைக் கண்ணா
இது சத்திய வாக்கு என்மேல் ஆணை
இன்னும் என்ன சொல்லவேண்டும் கண்ணா
நம் காதல் அமரக் காதல் தான் என்பேன்
சத்தியத்துக்கு அழிவில்லை என்றால்
நம் உண்மைக்கு காதலுக்கும் அழிவேதும் இல்லை
இப்போது காற்றோடு காற்றாய் மறைந்த நீ
உன் மனதை என் மனதில் பதித்து விட்டு
சென்றுவிட்டாய் , இன்று உன் உடல் இல்லை
என்றாலும் நீ வாழ்கின்றாய் இன்றும்
என்றும் என் மனதில் என்னவனாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Feb-17, 1:42 pm)
Tanglish : amara kaadhal
பார்வை : 76

மேலே