பணம்
அவசரத் தேவைக்கு ஆயிரம் பணம் கேட்டேன் நண்பனிடம்
இல்லை என்று சொல்லவில்லை
இருப்பதென்று சொன்னான்.
இன்று விடு நாளை மறுநாள் வந்து தருகிறேன் என்றான்.
வருவான்,தருவான் நினைத்தேன்.மறுநாள் வந்தது.அலைபேசியில் அழைத்தேன் எடுக்கவில்லை.பின் தொடர்பு கொண்டேன் தொடர்பு எல்லைக்கு வெளியே என்றது.அன்று முழுதும் அழைத்தேன் பதில் அவன் சொல்லவில்லை .இல்லையென்றே சொல்லிருக்கலாம் இருப்பதென்று சொல்லி இழுத்தடிப்பதே இருப்பவனின் வேலை காத்திருக்கிறேன்.
நாளை மற்றொரு நாளே....