சிறை - குறுங்கவிதை
சிறைக்குள்ளே அடைத்துவிட்டால் சிங்காரமாய் பேசுதலும்
மறைபொருளாய் எனைவைத்து எதிர்காதல் கணிக்கின்றார் .
பறையடித்துச் சொல்லிடவும் முடியாமல் நான்பரிதவிக்க
முறைதானோ இதுவும்தான் முகவரியும் எனக்கெங்கே !!!
பறந்தோடித் திரிந்தேனே பலர்காண அகம்மகிழ்ந்தேன்
திறந்துவிடவும் ஆளின்றி கூண்டினுள்ளே கிடக்கின்றேன்.
மறந்தனரே மனிதநேயம் மானிடரும் ஈங்கின்றே !
உறவுகளும் எனைத்தேட உணர்ச்சியினால் அழுகின்றேன் !!!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்