அவளின் அணிகலன்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
அவள்...! பெற்றோரை பேணும் பேதையாய்...
பெருமை பெறாத பெதும்பையாய்...
மழலையின் மறுஉரு மங்கையாய்...
மனுக்குல மாணிக்கம் மடந்தையாய்...
அறிந்தும் அறியாத அரிவையாய்...
தெரிந்தும் தெரியாத தெரிவையாய்...
பேரின்ப பெட்டகம் பேரிளம்பெண்ணாய்...
தூக்கம் தொலைத்த துணங்கையாய்...
துக்கம் துறந்த துறவியாய்...
கட்டியவனின் கைத்தடியாய்...
பிரச்சினைகளின் பிறப்பிடமாய் - அந்த
கலகத்தின் கலங்கரையாய்...
பொறுமையின் புகலிடமாய்...
சோதனைகளின் சாதனையாய்...
சுயநலமற்ற சுக்கிரனாய்...! என் அவள்...!
- நா. அருள்சிங், சிவந்திபுரம்
*******