உள்நாட்டு குளிர்பானம்...
நஞ்சில்லா பதநீரும்,இளநீரும் பட்டிக்காட்டானோட குளிர்பானம் என்றானே பட்டனத்தான்...!
கண்னை கவரும் புட்டியில் அடைக்கப்பட்ட பெப்சியையும் கோக்க கோலாவையும் பார்த்ததும் பட்டனத்தானோட குளிர்பானம் என்றானே பட்டனத்தான்....!
பழ வகை குளிர்பானம் பல வகையான குளிர்பானம்
பலம் தரும் என்று நினைத்தானே பட்டனத்தான்....!
இன்று சுவையால் சுகர் வந்ததேனோ.....!
சுகரால் சுகமிழந்தது ஏனோ...!
சுகமிழந்து சுமையாகி போனதுதான் ஏனோ....!
மருத்துவ செலவு செய்தே மாண்டுதான் போனாய்...!
வெளிநாட்டு குளிர்பானத்தால் வினையாகிபோனது.....!
உள்நாட்டு குளிர்பானத்துக்கு இன்று விதையில்லாமல் போனது....!
இனியாவது வெளிநாட்டு குளிர்பானத்தை அருந்தி மனம் வருந்தி போகாமல்.....!
உள்நாட்டு குளிர்பானத்தை அருந்தி மனம் குளிர்ந்து போவோம்.....!