பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணலாம்
லாபம் கிடைத்தப் போது பிறருக்கு பங்கு தர விரும்பாதவரெல்லாம் நஷ்டம் ஏற்படும் போது மட்டும் கையேந்தி பிறருடைய பங்கைப் பெற விரும்புவது ஏன்???..
பிறருடைய கஷ்டம் கண்டு நாம் இரங்கவில்லையெனில், நம் கஷ்டம் கண்டு யார் இரங்குவார்???....
அன்பு நண்பா...
உன் இஷ்டம் போல் வாழ உனக்கு உரிமையுண்டு...
அந்த இஷ்டம் மற்றவர்களின் உரிமைகளைப் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும்.....
குடிபோதையில் ஒருவன் நிதானமில்லாமல் சாலையில் வாகனம் ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாகிறானென்றால், அவன் மட்டும் தான் பாதிக்கப்படுகிறானா???...
எதிரில் வந்த குடிக்காதவரும் தான்....
அதே நிலையில் சிந்தித்துப் பாருங்கள்....
நீங்கள் சாலையில் நடந்து செல்லும் போது,
உங்களுடைய கண் முன்னே வாகனத்தில் வந்த ஒருவர் மரத்தில் மோதி அடிபட்டு விழுகிறார்...
அப்போது, என்ன செய்வீர்கள்???..
ஒடிச்சென்று உதவுவீர்களா???...
உதவ மாட்டீர்களென்றால்,
அதேநிலையில் தங்களுடைய நண்பர்களோ, அல்லது தங்களைச் சார்ந்தவர்களோ இருந்தால் என்ன செய்வீர்கள்???...
நிச்சயம் உதவி செய்ய முயற்சிப்பீர்கள் அல்லவா???...
அதுமட்டுமா???...
நோய் வந்தப் பிறகே டாக்டரையும், மருந்து, மாத்திரையையும் நாடிச் செல்கிறோம்...
நோய் வருமுன் அதைப் பற்றிச் சிந்திப்பதில்லை...
அதுமட்டுமல்லாமல் நோய் வராமல் தடுக்க உடற்பயிற்சி, யோகாசனம் போன்ற எந்த நல்ல பழக்கங்களையும் பழகுவதில்லை....
பல உயிர்க்கொல்லி நோய்கள் மனிதனுக்கு ஏற்படக் காரணமென்ன என்று சிந்தித்தால் தெரிவதோ, மனிதன் தன் இளமையில் இருந்து எவற்றையெல்லாம் இன்பம் நினைத்துச் சிந்திக்காமல் செய்கிறானோ அச்செயல்களாலேயே ஏற்படுகின்றன.....
உயிர்க்கொல்லி நோய்கள் தவறிழைப்பவனோடு நின்றுவிடுகின்றனவா?,
இல்லை...
எதிர்கால சந்ததியினர்களையும் பாதிக்கின்றன....
உண்மையில் ஆரோக்கியமான உடல்நிலை என்பது இன்றைய சமுதாயத்தில் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது???...
இந்நிலைக்குக் காரணம் என்ன???....
மனநலமின்மையே....
அனுதினமும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் யாதெனில் உணர்ச்சிகளைக் கையாளுதலைப் பற்றியதாக இருக்கின்றன...
இளைஞர்கள் மத்தியில் பெருமளவிலான பிரச்சனைகள் யாதெனில் நட்புக்கும், காதலுக்கும் இடையேயான வித்தியாசங்கள் மற்றும் காதலுக்கும், காமத்திற்கும் இடையேயான வித்தியாசங்களை உணராமையாகவே உள்ளன....
நாவடக்கத்தைக் கடைப்பிடிக்காமல் பேசுபவர்களோடு சேர்ந்தால் அவர்களைப் போலவே நாவடக்கமில்லாமல் பேசுகிறார்கள்....
குறிப்பாக இரட்டை அர்த்தத்தில் பேசுபவர்களே அதிகம்.....
உண்மை குறித்தும் பொய்மை குறித்தும் வித்தியாசங்கள் தெரியாமல், அறிவின் ஆளுமையற்றவர்களாகத் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்....
இன்றைய சமுதாயத்தில் மனிதர்களுக்கிடையே நம்பிக்கையென்பது சிறிதுமில்லை....
காதலர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள்,
கணவன், மனைவிக்கிடையே மனக்கசப்பு போன்ற இரண்டுமே மிகப்பெரிய பிரச்சனைகளாகக் கருதப்படுகின்றன...
ஆழமாகச் சிந்தித்தால் அவை ஒரு பிரச்சனைகளே அல்ல...
அழகான ஒன்று தன்னிடம் இருக்கும் போதே, அதைவிட அழகான ஒன்று கிடைத்துவிட்டால் தன்னிடம் இருப்பதை உதறிவிட்டு மரத்திற்கு மரம் தாவும் மந்தியின் மனநிலை எவ்வளவு கேவலமானது என்று சிந்தித்துப் பார்த்தீர்களா???...
எல்லா மனிதர்களிடத்திலும் காணப்படும் ஒரு மனநிலை யாதெனில் அதிக லாபம் எங்கு கிடைக்கிறதோ , அதை நாடுவதாகவே உள்ளது....
போதுமென்ற எண்ணம் கொண்ட ஒரு மனிதரைக் கண்டுபிடித்துக் கூட்டி வாருங்களென்றால் இந்த உலகில் எங்குத் தேடினாலும் ஏமாற்றமே ஏற்படும்...
ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் மனதிருப்தி இல்லாமலேயே வாழ்கிறார்கள்...
இதனாலேயே பிரச்சனைகளுக்கான தீர்வுகளை அறிய இயலவில்லை...
அறிந்தாலும் கடைப்பிடிக்க இயலவில்லை...
சமுதாயத்தில் மனிதர்களெல்லாம் ஒவ்வொரு வகையில் கயவர்களாக இருந்துக் கொண்டு, அரசியலை விமர்சித்தால் அது முறையற்ற செயலே...
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பிரச்சனைகளுக்கு ஆயிரக்கணக்கான காரணங்களைச் சொல்லி, யதார்த்தங்கள் என்று ஏற்றுக் கொண்டு வாழ்கிறார்கள்...
ஆனால் அவை மிக தவறான வாழ்க்கைமுறை..
ஏனெனில் அவ்வாறு வாழ்வது மிகவும் மூடத்தனமான செயல்....
பயமில்லாமல், பிரச்சனைகளில்லாமல் வாழ வேண்டுமென்ற எண்ணம் நம்மில் பலரிடம் காணப்பட்டாலும்,
அதை ஆக்கபூர்வமானதாகச் செயலாக்க முனைவதில்லை....
ஆண், பெண் என்ற வித்தியாசங்கள் மனதிலே குடிகொண்டதாலேயே ஆண் பெண்ணை அடக்கியாள முயல்கிறான்...
பெண் ஆணை அடிமையாக்க முயல்கிறார்கள்...
அன்பென்னும் சமர்ப்பணம் இன்றைய ஆண்கள் மற்றும் பெண்களிடம் சிறிதும் காணப்படுவதில்லை...
ஒருவருடைய உணர்வுகளை மற்றொருவர் காயப்படுத்தி மகிழ்ச்சி கொள்கிறாரென்றால் இந்த மனித சமுதாயத்திற்கே பகுத்தறிவு பற்றி பேசும் அருகதை இல்லை....
மகாத்மா காந்தியைக் குற்றவாளியென்று கூறுபவர்கள் பலருண்டு...
அதை எனது தந்தையிடம் கூறிய போது அவர்,
" காந்தியை குற்றவாளியென்பவன் நிச்சயம் யோக்கியனாக இருக்கமாட்டான். ", என்று ஒரே வரியில் பதிலளித்தார்...
உண்மையில் அவர் கூறியதும் சத்தியமே....
தந்தையின் பெயரில், வேண்டியவர்கள் கோடுத்த சிபாரிசு கடிதங்களின் மூலம் முன்னேற்றம் பெறுபவர்கள், முன்னேற நினைப்பவர்களெல்லாம் திறமையற்ற வீணர்களே....
கமல்ஹாசனின் திரைப்படத்தில் கூட ஒரு வசனம் வரும், "
கையாளாகாதவர்களே, தகப்பன் பெயரைக் கைத்தடியாக உபயோகிப்பார்கள்... " என்று...
நீங்கள் யார்???...
உங்களுக்குச் சொந்தமாகத் திறமை இருக்கிறதா???...
உங்களால் சிந்திக்க முடிகிறதா???...
நீங்கள் யாரென்பதை நீங்களே முடிவு செய்கிறீர்கள்....
உங்களைப் பற்றிய பிறருடைய கருத்துகளை வேண்டுவதெல்லாம் அவசியமற்றது....
உங்களுடைய பகுத்தறிவும், ஒழுக்கமும் தான் உங்களுடைய திறமையைத் தீர்மானிக்கின்றன...
உடல் பலமும், மன பலமும் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம்....
சிந்தித்து செயலாற்றுங்கள்...
நன்றிகள்....