பொற்காலம்
"ஜெயலலிதாவின் புகைப்படங்களை அரசு அலுவகங்களில் பயன்படுத்தக் கூடாது என்று சட்டமோ, நீதிமன்றங்களோ தடை செய்துவிடவில்லை. தங்களுடைய சட்டங்களை மீறியதற்காக மகாத்மா காந்தியையும் நேதாஜி சுபாஸ் சந்திர போஸையும் அன்றைய பிரிட்டிஷ் அரசு தண்டித்து சிறையில் அடைத்தது சிறையில் அடைக்கவில்லையா? அவர்களுடைய புகைப்படங்களை அரசு அலுவகங்களில் மாட்டாமல் இருக்கிறோமா?"
😊😊😊😊😊😊😊
- ராஜேந்திர பாலாஜி, தமிழக பால்வளத் துறை அமைச்சர்
21-02-2017 அன்று உதிர்த்த கருத்து!
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
நன்றி: "தி இந்து" 23-02-2013.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊{நான் எனது 22 வயதுவரை வளர்ந்த
கொங்கு நாட்டில் நிலவிய
பழமொழி::
@@@@@@@@@@@@@@@@@
"அரியும் சிவனும் ஒண்ணு - அதை
அறியாதவங்க வாயில மண்ணு".
@@@@@@@@@@@@@@@@@@
அந்தப் பழமொழி இன்னும்
வழக்கத்தில் உள்ளதா என்று
தெரியவில்லை.
#@@@@@@@@@@@@@@@@@@@#
குடியாட்சி நடைபெறும் இந்தியாவில்
உள்ள ஒரு மாநிலமாக இருக்கும்
தமிழகத்தில் மாண்புமிகு
அமைச்சராக இருப்பவர், முன்னாள்
முதல்வர் ஜெ. அவர்களை பிரிட்டிஷ்
அரசாங்கத்தை எதிர்த்துப் போராடி
நாட்டின் விடுதலைக்காக பல
தியாகங்களைச் செய்து விடுதலைப்
போராட்டத்தை முன்னின்று நடத்திய
அண்ணல் காந்தி அடிகளுடனும்
சுபாஸ் சந்திர போஸ் அவர்களுடனும்
ஒப்பிட்டுக் கருத்துத்
தெரிவித்திருப்பது புதுப் புதுமொழி
ஒன்றிற்கு வித்திடுவதாகக்
கருதுகிறேன்.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
புதுமொழி::
'புரட்சித் தலைவியும்
மகாத்மாவும் ஒண்ணு - இதை
அறியாதவங்க வாயில மண்ணு".
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊