தொடரும் கற்பழிப்பு கொலைகள் - சகி

கற்பழிப்பு ....
கர்ப்பிணி பெண்ணென்றும்
பாராமல் அவளை சிதைத்து
கருவையும் சிதைத்து
கொன்ற கொடூர
காம வெறிக்கொண்ட
நாய்கள் ......
தெருநாய் அத்தெருவில்
யாரையேனும் கடித்தல்
கற்களால் அடித்து
கொன்றோ விடுகிறார்கள் ...
பெண்களின் கற்பையும்
உயிரையும் சூறையாடும்
காமவெறிக்கொண்ட நாய்களை
அடித்ததே கொல்லவேண்டாமா??????
முக்கிய செய்திகளென்று
அனைத்து தொலைக்காட்சிகளிலும்
பெண்களின் ஊரும் வயதும்
பெயரும் தாய் தந்தை
உறவினர்களின் கதறல்கள்
பார்த்து பரிதாப வார்த்தைகளும்
முடிந்துவிடுகிறது ......
சின்னச்சிறு வயது சிறுமிகளும்
பாலியல் கொடுமைக்கு
உயிரை பலியாகி கொண்டேதான் இருக்கிறார்கள் ........
உடலுறுப்புகள் சிதைத்து
உயிரும் பிரிந்து
மடிகிறார்கள் ......
காமவெறிக்கொண்ட
சைத்தான்களை சிறையில்
அடைப்பதையும் மரணதண்டனை கொடுப்பதையும் தவிர்க்கவேண்டும் ......
கொடூரமாக கொன்று
புதைக்கவேண்டும் .....
கைகால்களை
துண்டிக்க வேண்டும் ....
அரபுநாடுகளில் கொடுக்கும்
தண்டனைகளை விட
மிகக்கொடுமையாக
இருக்கவேண்டும் .....
பெண்கள் நாம்
முயற்சி செய்யவேண்டும் ....
எழுத்தில் உள்ள அன்பர்களே
எத்தனையோ போராட்டங்கள்
இன்று தமிழ்நாட்டில்
நடக்கிறது ......
கொடுமையான சட்டம்
பாலியல் கொலைகளுக்கு
கொண்டுவர நாம் ஏன்
போராட்டக்கூடாது......
முயற்சி செய்வோமா ?
முடிந்தால் பெண்களுக்கு
உதவ வாருங்கள் .....
என் மனத்தில் பட்டது
வலிக்கிறது என் ஒருவளின்
கோபம் வலிகள் மட்டுமே
தீர்வாகாது .......
மக்கள் அனைவரின் .
ஒத்துழைப்பும் துணையும் வேண்டும் ......
என்னொருவளின் குரல்
மட்டுமே போதாது .....
உங்களின் குரலும்
உதவியும் வேண்டும் .....
பதில் வேண்டும்