வாழ்க்கைத்துணை

வாழ்க்கைப்பாதையில் நடக்கும்போது
வளையாத நதிகள் இல்லை
அலைகளில்லாத கடல் இல்லை
கண்ணீர் இல்லாத கண்கள் இல்லை
வருத்தம் இல்லாத நெஞ்சம் இல்லை
வலியில்லாத வாழ்க்கை இல்லை
வாழ்க்கைத்துணையாக வரும்போது
எனக்காக ஒவ்வொரு கணமும் தேவையில்லை
ஒரு சில கணம் இருந்தால் போதும்
வலிகளை மறந்து வலிமையாக
எனக்கு அந்த கணம் போதும்

எழுதியவர் : சுமதி பழனிசாமி (24-Feb-17, 3:25 pm)
சேர்த்தது : sumathipalanisamy
பார்வை : 92

மேலே