மகள்

அன்பு மகன்களே
ஒரு கையிலாகாத அப்பாவின் கதறல்
பெண் குழந்தை பிறந்தது என்று
எல்லா தகப்பனைப்போல
நானும் முகம் சுழித்தேன்
ஆனால்அது குழந்தையை
கையில் வாங்கும் வரைதான்
அதன்பின் தேவதையின்
தகப்பன் நான் என்ற
பெருமை இந்த ஜென்மத்துக்கு
போதும் என நினைத்தேன்
அந்த குட்டி விரல்
என் கையை பற்றிய
அந்த கணம்
அந்த ஸ்பரிசம்
என் வாழ்க்கையின்
நிறைவை சொல்லியது
அந்த கணம் சொல்லியது
இப்போது பற்றும் இந்த விரல்
கணவனின் கரம் பிடித்து
தரும் வரை என் கரத்தின்
பிடியில் தான் ஆயிரம் கதை
பேசுமென்று உணர்ந்தேன்
முத்தமிடும்போது மீசை
குத்தியதால் முகம் சுருக்கினாள்
மீசைதான் ஆண்களின் கம்பீரம்
என்று சொல்லித்திரிந்த நான்
அப்போதே எடுத்து விட்டேன்
அப்போதே முடிவு செய்தேன்
மகள் முகம் சுருக்கும் எந்த செயலையும் செய்வதில்லை என்று
என் மனைவி திட்டுவாள்
பெண் குழந்தைக்கு இவ்வளவு
செல்லம் ஆகாதென்று என்று
என் தேவதைக்கு நான்
கொடுக்காமல் யார் கொடுப்பார் என்பேன்
அப்பா என்ற அழைப்பில்
உலகத்தில் உள்ள அனைத்து
அன்பையும் காண்பிப்பாள்
வீட்டிலிருந்தால் எனக்கு தலைகோதவும் தலைசீவவும்
அவளுக்கு நேரம் போதாது
கண் சுருக்கும்போதே அவளின்
காரணம் புரிந்து அதை செய்வேன்
இன்னும் இன்னும் எத்தனையோ
கடலில் எவ்வளவு தண்ணீர்
உள்ளது என்பதை எப்படி
அளவிட முடியாதோ அப்படித்தான்
அப்பா மகள் பாசம்
அதை தேவதையைப் பெற்ற
சேவகர்களுக்குப் புரியும்
முகம் சுருக்காமல் வளர்த்த
எங்கள் தேவதையை முள்ளாக
குத்தி பலாத்காரம் என்ற படுங்கொலை
செய்யும் என்பில்லா மகன்களே
அதை தடுக்க வலியில்லாது
பாவியாகி நிற்கும் ஒவ்வொரு
தகப்பனின் கதறல்
உங்கள் காதுகளில் கேட்குமா???
எங்கள் உள்ளத்தின் அலறல் ......

எழுதியவர் : சுமதி பழனிசாமி (24-Feb-17, 3:22 pm)
சேர்த்தது : sumathipalanisamy
Tanglish : magal
பார்வை : 70

மேலே