இன்றைய அரசியல்

அனுபவம் வேண்டுமாம்..
ஊழல் செய்துவிட்டு தப்பித்துக் கொள்ளும் அனுபவம் வேண்டுமாம்...
அதிக ஆண்டுகள் கட்சியில் இருந்து ஊழல்வாதிகளின் சீடர்களாக இருந்திருக்க வேண்டுமாம்...

நிகழ்வதோ மக்களாட்சியாம்...
ஆட்சி அமைக்கத் துடிப்பதோ வாரிசுகளாம்....

அணிவதோ வெள்ளையாம்...
அடிப்பதோ கொள்ளையாம்...

நாட்டில் எத்தனையோ துறைகளில் இருப்பினும், அரசியல் தான் ஊழலில் முதன்மையாம்...

வியாபாரிகள் தேவையாம்...
சிறந்த வியாபாரிகள் தேவையாம்...
அதைவிட சிறந்த வியாபாரிகளாக மக்கள் இருப்பார்களாம்...
எந்த அளவுக்கு சிறந்த வியாபாரிகளென்றால் தங்களது வாக்குரிமை விற்கும் அளவிற்காம்...

மருத்துவமென்பது நோயாளிகளுக்கு அடிப்பட்டவர்களுக்கு நோய் நீக்கி, வலி நீக்கி ஆரோக்கியமாக வாழ வைப்பதாம்...
ஆனால், உயிரே போகிற நிலையில் அரசு மருத்துவமனைக்குச் கென்றால், அங்கு சிகிச்சை அளிக்காமல் அடையாள அட்டை கேட்பார்களாம்...

எனது அடையாளம் நான் தான்...
எனது செயல் தான்...
உங்களது அடையாளம் நீங்கள் தான்...
உங்களது செயல் தான்...
அதை உணராது எனது உருவம் கொண்டு எனக்கு அடையாளம் தந்து அதன் பேரில் என்னை நம்புவீர்களென்றால் உங்களைப் போன்ற முட்டாள்கள் வேறெங்கும் இல்லையென்பேன்....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (24-Feb-17, 8:18 pm)
Tanglish : indraiya arasiyal
பார்வை : 2990

மேலே