காதல் உள்ளம் எழுதும் மடல் - கொச்சகக் கலிப்பா
மடல்தனை நாளும்நான் மனங்குளிர எழுதுகின்றேன் !
கடலலையாய் எனதுள்ளம் கரைசேரத் தவிக்குதிங்கே
விடலைதானே என்மனமும் விலகிடவும் மறுக்கிறதே
உடல்தனைப் பார்க்கவில்லை உள்ளமதைப் பார்த்திடுதே !
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்