புதுக்கவிதையிலிருந்து
பொய்கையில் சிரிக்கிறது தாமரை
புன்னகையில் சிரிக்கிறாய் நீ
கற்பனையில் மலர்கிறேன் நான்
கவிதையில் சிரிப்பது நீதான்
மலர் இல்லை !
பொய்கை தனில்சிரிக்கும் பூமலர்த் தாமரை
புன்னகை யில்சிரிக் கும்செம் மலர்பூநீ
கற்பனையில் நான்மலர் வேன்மலர் இல்லை
கவிதை யிலும்நீதா னே
---புதுக் கவிதையின் வெண்பா வடிவம்
---கவின் சாரலன்