வாழ்க்கை
வாழ்க்கை!
வாழ்க்கை, ஒரு விமானப்பயணம்!
வாழ்ந்து பார்த்தவர், கூறுவர் அனுபவம்.
பனிமூட்டத்தில், பறக்காது விமானம்,
பனிப்போரிலே, சிறக்காது குடும்பம்,
கணவன்- மனைவி இரு எஞ்சின்களாம்,
கண்டதும் பழுது ஒன்றில் என்றாலும்,
தொழில் நுட்பக்கோளாறு (புரிந்து கொள்வதில் கோளாறு) காரணமாகும்.
தொடராது பயணம் (வாழ்க்கை) சரியாகும் வரையில்!