இது இப்படித்தான்

இது இப்படித்தான்!
காதலராய் பார்க்கில்,
மணிக்கணக்காக பேசியவர்கள்,
விவாகரத்திற்காக கோர்ட்டில்,
நொடிகள் கனக்க பேசினர்!
தம்பதியர்களாய் வீட்டில்,
நாள் கணக்காக பேச மறந்ததால்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (28-Feb-17, 8:49 am)
பார்வை : 71

மேலே