காதல் பழக வா-12

காதல் பழக வா-12
என் நெஞ்சம் கொதிக்க
என் வாழ்க்கை தவிக்க
பொய்யொன்று கூறி
என் கனவுகளை
பொய்க்க செய்தவன் நீ!!!!!!
இனி உன் பொய்களை
பொய்க்க செய்து
என் கனவுகளை
கரம்பிடித்து உன்னை
தலை கவிழ செய்யவே
வாசம் செய்கிறேன்
உன்வசம்....
நிமிடங்கள் கடக்க கடக்க ராதியின் கோபமும், விரோதமும் வளர்ந்து கொண்டே தான் போனதே ஒழிய சிறிதும் குறைந்த பாடில்லை...எல்லார் முன்பும் சிரித்தமுகமாக இயல்பாக இருப்பதை போல காட்டிக்கொண்டாலும் ராதியின் மனமோ கண்ணனை வீழ்த்துவதற்காக ஓயாமல் அசைபோட்டபடியே திட்டம் தீட்டிக்கொண்டிருந்தது....
எப்படி அவனை வீழ்த்துவது, எப்படி அவன் கம்பீரமான முகத்திரையை கிழித்து எல்லார் முன்னிலையிலும் அவன் தலைகுனிய அவனுக்கு பாடம் கற்ப்பிப்பது........இதே தான் ராதியின் முழுநேர சிந்தனை...இதிலேயே அன்றைய பொழுது எப்படி கழிந்ததென அவளுக்கே தெரியாத அளவுக்கு அவள் சிந்தனை அவளை மூழ்கடித்தது......
என்ன சாப்பிட்டால்? அவளை சுத்தி யாரெல்லாம் இருந்தார்கள்!!! இத்தனை நேரம் என்னவெல்லாம் செய்தால் என்று யோசித்து பார்த்தால் கூட நினைவுக்கு வராத அளவுக்கு இயந்திரத்தனமாய் சிரித்து, உணவு உண்டு, ஏதோ பேசி நேரத்தை கடத்தினாள்.....
இரவு வந்தது, அவளுக்கு துணையாய் நிலவும் வந்தது......
“கண்ணா என்ன தான் ராதி கழுத்துல நீ தாலி கட்டிருந்தாலும் ரிஷப்ஷன் முடிஞ்சி நல்ல நாள் பார்த்து சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு பண்ற வர ரெண்டு பேரும் தனிமையில தனி ரூம்ல இருக்க வேண்டாம், நான் என்ன சொல்றேன்னு புரியும்னு நினைக்கிறேன்” என்று அவன் பெரியப்பா தயங்கி தயங்கி கூற மெலிதான புன்னகையோடு சம்மதம் கூறிவிட்டு அவன் அறைநோக்கி சென்றவனை ராதி பார்த்திருந்தால் நான்கு அரைவிட்ட மாதிரி கற்பனையாவது பண்ணிருப்பாள்......
இதே அறிவுரை ராதிக்கும் கண்ணனின் சித்தியால் அறிவுறுத்தப்பட உள்ளுக்குள் எரிச்சலோடு முகத்தில் புன்னகை மாறாமல் சரி என்றவாறு அவளுக்கென ஒதுக்கப்பட்ட கெஸ்ட் ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்....இவங்க எல்லாருக்கும் சீக்கிரமே நான் யாருனு ப்ரூவ் பண்றேன், டாமிட்......ஷெட், இவனை நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணி அவனை தனிமையில சந்திக்க அலையிற மாதிரி எனக்கு அட்வைஸ் பன்றாங்க.....அவனை மட்டும் தனியா பார்த்தா எனக்கு வர ஆத்திரத்துல நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது, அந்த அளவுக்கு கொலைவெறில இருக்கேன், இதுல அவனோட ரொமான்ஸ் பண்ணுவேன்னு நினைச்சாங்களா, நோ வே......அது மட்டும் எப்பவுமே நடக்காது.....இன்னும் கொஞ்ச நாள் தான் அவனை உண்டு இல்லனு பண்ணிட்டு என் வாழ்க்கையை பாத்துட்டு நான் போய்கிட்டே இருக்க போறேன், அப்போ தெரியும் நான் யாருனு...
இப்படியாய் திரும்ப திரும்ப இதே வார்த்தைகளை மனதிற்குள் பேசி பேசி அலுத்து போய் தூங்கியவள் நடு இரவில் அலறி அடித்து எழுந்தாள்....
தன் மகள் அவளாகவே ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்து கொண்டு தங்களை புறக்கணித்துவிட்டாள் என்ற அவமானமும், வலியையும் தாங்கி கொள்ள முடியாமல் வினோ விஷத்தை குடித்துவிட அந்த அதிர்ச்சியில் ராமநாதனுக்கு ஹார்ட் அட்டாக் வந்து அங்கேயே உயிரை விட்டு விட்டார்.....
மனசெல்லாம் படபடப்பு அதிகமாக அவள் இயல்புநிலைக்கு திரும்பவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது....
ஒஹ் காட், நல்லவேளை கனவு தான்.....
இது நிஜமாவே நடந்திருந்தா என்ன ஆகியிருக்கும், கண்டிப்பா இப்படிலாம் நடக்காது, அம்மா தைரியசாலி, அப்பா பக்குவசாலி....கண்டிப்பா இப்படிலாம் நடக்க வாய்ப்பே இல்ல......இது வெறும் கனவு தான், இனி தான் நிஜத்தை சரிப்படுத்த ஆரம்பிக்கணும், என்ன இந்த அளவுக்கு கொண்டுவந்தவனுக்கு நிஜத்தை புரிய வைக்கணும்....
உடலெல்லாம் வியர்த்து கொட்ட தொண்டை வறண்டு உடல் பலவீனமாகி தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற உணர்வு தலைதூக்க தண்ணீரை தேடினால் அங்கு வெறும் டம்ளர் மட்டுமே’ தனக்கென்ன வந்தது’ என்று தலை குப்புற கிடக்க வேறு வழியில்லாமல் சமையல் அறை நோக்கி பயணத்தை தொடங்கினாள்....
ரூம்ல தண்ணிகூட இல்லாம இப்படி தனியா விட்டுட்டாங்களே, இந்த வீட்ல எது எது எங்க இருக்குனு வேற தெரியாது, எல்லா ரூமும் பூட்டி இருக்கு, ஐயோ லைட் கூட ஆப் ல இருக்கே, இந்த இருட்டுல எங்க போய் தேட, சுவிட்ச் எங்க இருக்குனு கூட தெரியல, நல்லா வந்து மாட்டிகிட்டேன்...
புலம்பியபடியே இருட்டில் குத்துமதிப்பாக எங்கெங்கோ நடந்தவளுக்கு காலில் ஒரு பெரிய அடி விழ, வலி அதிகமாக இருந்ததால் அவளையும் அறியாமல் கத்தியபடியே காலை பிடித்து கொண்டு கீழே அமர்ந்துவிட்டாள்......
அந்த நேரத்தில் கண்ணன் ஏதோ சத்தம் கேட்டு எழுந்து ஹாலுக்கு வர ஏதோ ஒரு உருவம் அங்கு அசைவதை பார்த்து அவளின் அருகில் சென்று அவள் முகத்தை உற்று பார்த்தான்... அது ராதி தான் என உறுதியானபின் யோசிக்க ஆரம்பித்தான்...
"நீ இங்க என்ன பண்ற?"
அவன் குரலை கேட்க கேட்க அவளுக்கு வலியையும் மீறி கோபம் தலை தூக்க ஆரம்பிக்க வீராப்பாக பக்கத்தில் இருந்த சுவரை பிடித்துக்கொண்டு எழ முயற்சித்து பாதி எழுந்த நிலையில் காலை ஊன்ற முடியாமல் மீண்டும் தொப்பென்று தரையில் விழுந்தாள், ராதியின் நிலையை ஒருவாறாக யூகித்த கண்ணன் அவளை கைகளால் அள்ளிக்கொண்டு அவள் அறையை நோக்கி நடக்க அவளோ திமிறி கொண்டு அவன் கைகளிலிருந்து விடுபட முயற்சித்து தோற்று கொண்டிருந்தாள்......கண்ணனோ அவளை அசைய விடாமல் அவன் வலிய கரங்களால் அடக்கி கொண்டிருந்தான்....இவையெல்லாம் இருவரின் மௌன நாடகமாகவே அரங்கேறி கொண்டிருந்தது......
அந்த நேரம் பார்த்து தண்ணீர் குடிக்க வந்த கண்ணனின் தங்கை வெளிச்சமில்லா அந்த அடர் இருட்டில் இவர்களின் மௌன அரங்கேற்றத்தை தவறுதலாக புரிந்து கொண்டு திருடனோ என்று பயந்து கூச்சல் போட ஒட்டு மொத்த குடும்பமும் அலறியடித்து கொண்டு ஹாலில் ஆஜராகி விட்டனர்.....
லைட்டை போட்டு பார்த்தால் கண்ணன், அவன் கையில் திமிறியபடி ராதி......இதை பார்த்தவர்கள் மூர்ச்சை ஆகாத குறையாய் அதிர்ந்து நிற்க இதை சற்றும் எதிர்பார்க்காத கண்ணனும், ராதையும் கூட திகைத்து விட்டனர் ......
""என்னப்பா ஆச்சு , இந்த நேரத்துல ராதிய தூக்கிட்டு எங்க போற?"
கண்ணன் சுதாரித்து பதில் கூறும் முன்னர் கிடைத்த சின்ன இடைவெளியில் ராதியின் மூளை அதிவேகமாக செயல்பட்டு அவளையும் அறியாமல் கண்ணனின் கையிலிருந்து விடுபட்டு தரையில் நின்றாள்......
"மாமா அது வந்து, நான் வேண்டாம்னு தான் சொன்னேன், ஆனா கண்ணன் அத்தான் தான் ரொம்ப கம்பெல் பண்ணினாரு,அத்தானை எப்படி கண்ட்ரோல் பண்றதுனே தெரியல, நல்லவேளையா நீங்களே வந்துட்டீங்க, நான் ரூம்க்கு போறேன் என்று வரவழைக்கப்பட்ட வெட்கத்தோடு தன் திட்டத்தை செயல்படுத்திவிட்டு அங்கிருந்து வேக நடை போட்டு தன் ரூமிற்குள் வந்து கதவை போட்டி கொண்டவள் மனமெல்லாம் அத்தனை சந்தோசம்....பழி வாங்கிட்டேன் அவனை, இப்போ எல்லார் முன்னாடியும் எப்படி கம்பீரமா நிக்கறானு பாக்கறேன், எவ்ளோ பெரிய அவமானம், படட்டும், என் அம்மா அப்பா முன்னாடி என்ன அசிங்கப்படுத்தினானே, எவ்ளோ பெரிய பொய்ய அசால்ட்டா சொன்னான், இப்போ வலிக்கும்ல...வலிக்கட்டும்....ஆனா இப்போ , அவமானதுல சிவந்து போன அவன் முகத்தை பார்க்கணுமே, எப்படி வெளில போறது....அங்கயே என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு வந்துருக்கணும், அவசரப்பட்டு வந்துட்டேன்...இப்போ திரும்ப போக முடியாதே...இருக்கட்டும் இது ஆரம்பம் தானே இனி இதுபோல நிறைய நடக்கும், நடத்தி காட்டுவேன், அப்போ பார்த்துக்கலாம்.......
எதையோ பெரிதாய் சாதித்தவள் போல காலையில் இருந்து அவளை அழவைத்ததற்கும், அவள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியதற்கும் கண்ணனுக்கு அவள் திருப்பி கொடுத்த முதல் அடி தந்த திருப்தியில் படுத்தவுடன் உறங்கிவிட்டாள்.......