மயில்

பெங்களூரு சென்னை
இரயிலில் பார்த்தேன்
அந்த மயிலை
சொல்ல வார்த்தைகள்
இல்லை அவளின் எழிலை
ஜன்னலோர காற்று
முத்தமிடுது அவளின்
அசைந்தாடும் குழலை
அலைபாயுதே என் விடலை
வாய்மையே வெல்லும்
என்பது இதுதானோ
ஆம் அவளின் அழகான
சிவந்த வாய் மை என்
மனதை வென்றுவிட்டது...

எழுதியவர் : செல்வமுத்து.M (28-Feb-17, 2:48 pm)
Tanglish : mayil
பார்வை : 119

மேலே