கண்டுகொல்

கருங்கூந்தலில்
ஒளிர்வதென்ன
தேய்பிறைப்பின்
முழுமதியா.
விழிகனை
தாழ்த்திருக்கு
எனை தாக்கவோ
இதழ் மொட்டு
சிவந்திருக்கு
எனை வெளுக்கவோ,
நெற்றிதனில்
விழுந்தமுடி
எனை இழுக்கவோ.
காத்திருக்கேன் நான்
காதலுடன்.
கண்டுகொள்
காணாமல் கொல்லாதே.