நிலவும் காதலியும்
வானில் வந்த வெள்ளி நிலா
மண்ணில் ஓடையின் பளிங்கு நீரில்
தன முகத்தைப் பார்த்து ரசிக்கயில்
அங்கு நீ எனைக்காண வந்தாய் என்னவளே
உன்அழகு முகத்தைப் பார்த்தபின் நிலவும்
வெட்கி குறுகி கார்மேகம்ப்பின்னே
மறைந்து ஒளிந்து ஓடியது கண்டாயோ
இளமானே, என்னவளே, உன் அழகை
எடுத்துரைக்க உந்தன் காதலன்
இந்த கவிஞனுக்கு இன்னும் வார்த்தைகள்
ஏதும் இல்லையடி தங்கச்சிலையே

