படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

குயவன் வாழ்விலும்
மண் போட்டது
உலகமயம் !

அழகிய பானையானது
களிமண்
குயவன் கை வண்ணம் !

கவனம் சிந்தால்
சிதைந்துவிடும்
பானை !


சக்கரம் சுழல
சுழன்றது
வாழ்க்கைச் சக்கரம் !

கைகளில் உண்டு
மனதில் இல்லை
அழுக்கு !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (28-Feb-17, 3:13 pm)
பார்வை : 144

மேலே