ஏற்க மறுப்பதேனோ

வாழ விரும்பியும்
வசிக்க இடமின்றி
வறுமையில் வாடும்—தரித்திர
வாசிகள் நாங்கள்

காக்கும் கடவுளும்
கண் திறந்து பார்க்காம
கைவிட்டு போனதால்
குழந்தை, குட்டி ஏதுமில்லை

உறவுமில்லை எங்களுக்கு
உற்றாருமில்லை
நட்புமில்லை—ஒரு
நாதியுமில்லை

குடி கெடுக்காத நாங்கள்
குடிமக்களாயிருந்தும்
பிற மனிதர்களால்
புறக்கணிக்கப்படும் பாவங்கள்

பார்வதி, பரமசிவனை
பாரிலுள்ள மக்கள்
அர்த்தநாரீஸ்வரராகவும்
அங்கீகரிக்கும்போது

உடலமைப்பில்
உருமாற்றம் உள்ள
எங்களையும்
ஏற்க மறுப்பேதேனோ?

எழுதியவர் : கோ.கணபதி (28-Feb-17, 1:18 pm)
Tanglish : yerka maruppatheno
பார்வை : 208

மேலே