இன்னும் எத்தனை வாசலோ

வாடிவாசல்
நெடுவாசல்
வாசல் விட்டு
வந்தோம்
இன்னும்
எத்தனை வாசலோ.

அன்று,
அகிம்சையில் பெற்றோம்
பாரதம்.
இன்று,
பாரதம் காக்க
அகிம்சையில் அமர்தோம்.

தொன்று தொட்டு வந்த
எம் கலாச்சாரம் காக்க.
தோண்ட போகும்
எம் நிலம் காக்க.

மாநில எல்லையில்
நீர் அணை தடுப்பு.
கடல்தன்னிலே
அண்டை நாடு
மீனவர் பிடிப்பு.

வாசல் விட்டு வந்து
இன்னும் எத்தனை
போராட்டம் செய்வது.

எங்கள் வாசல் தேடி
வந்தோரே ,
உங்கள் வேஷம்
போதும்.

கூடுவது நங்கள்
களைய போவது நீங்கள்.

காத்திருங்கள்
தலைவாசலில்.

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (1-Mar-17, 12:08 pm)
சேர்த்தது : ரா.ஸ்ரீனிவாசன்
பார்வை : 67

மேலே