பாசத்தின் பலம்
" என்னக்கு பயமாய் இருக்குடி "
"ஐயோ !! அனு எதுக்கு பயப்படுற ? உனக்கு அவனை பிடிச்சிருக்குல ? அப்புறம் என்ன ? நாளைக்கு அவன் பூங்காவுக்கு வருவான் மனசில என்ன இருக்கோ அதை சொல்லிடு . OK வ ? சரி வீட்டில நாளைக்கு எங்க போறேன்னு சொல்லி இருக்க ?"
"ஸ்பெஷல் கிளாஸ் இருக்குனு சொல்லி இருக்கேன் ."
"ஓகே ம !! இப்ப நிம்மதியா தூங்கு . சரி நான் போன் வைக்கிறேன் " என்று கீதா போன் வைத்தாள் .
அனுக்கு ஆனா தூக்கமே வரல .. கௌதம் காலேஜ்ல முதல் நாள் வந்த போதே அனுவின் மனதை கவர்ந்திட்டான் ..தன்னுடைய காதலை எப்படியாவது சொல்லணும்னு பல முறை யோசித்தாள். ஆனால் தைரியமில்லாமல் இவ்வளவு நாள் போனது . கீதாவிடம் விஷயத்தை சொன்னதும் அவள் கௌதமிடம் பேசி நாளைக்கு அவனை பார்க்க ஒரு சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்தி இருக்கிறாள் . நாளைக்கு எப்படியாவது சொல்லிடணும்னு மனதுக்குள் நினைத்து கொண்டே தூங்கிவிட்டாள் .
மறுநாள் காலையில் எழுந்து கிளம்பினாள் .
அப்போது வெளியில் அப்பா பேசும் குரல் கேட்டது .
"ஆமாம் சின்ன பொண்ணு என்ன பண்ற?" என்றார் மது மாமா .
"காலேஜ்ல படிக்கிறாள் ".
"எதுக்குப காலேஜ்லாம் காலா காலத்துல கல்யாணம் பண்ணி கொடுக்காம ?? இப்பலாம் காலேஜ்லாம் போன காதல் கீதல்னு சொல்லிட்டு வந்துருவாங்க!!"
" என் பொண்ணு புத்திசாலிப்ப நல்லா படிப்பா அதான் .."
அதை கேட்டதும் மனசுல எங்கோ ஒரு குத்தல் விழுந்தது .. அப்பா கிளம்புறேன்னு சொல்லி நடந்தேன் .
அப்போது . " காசு வச்சுருக்கல" ?? என்று விசாரித்தார் அப்பா
"இருக்குப்ப என்றேன்" ..
"சாப்பாடு எடுத்திய அனு ?" இது அம்மா
எடுத்தேன்ம என்று சொல்லி நடந்த என்னை கையை பிடித்து நிறுத்தினாள் அக்கா .
"காலேஜ்லாம் படிக்கிற ஒரு பொட்டு ஒழுங்கா வைக்க தெரில .." என்று சொல்லி பொட்டை சரி செய்தாள் .
வெளியே வந்ததும், " அனும்மா பஸ் ஸ்டாப் வரைக்கும் விடுறேன் . பைக்ல உட்க்காருனு சொன்னான் .. "அண்ணன் .
பஸ்சில் ஏறி பூங்காவுக்கு வந்தேன் பூங்கா முன்னாடி நின்னிருந்தாள் கீதா .
"வா அனு ..."என்றாள் சிரித்து கொண்டே ..
"கௌதம் இன்னும் வரல .. நான் call பண்ணவா ?" என்றாள் .
சட்டென்று "வேண்டாம் என்று" அவளை தடுத்தேன் .
"என்னாச்சு அனு ?" என்று வினவினாள் .
"கீதா என்னை மன்னிச்சுடுடி . நான் சொல்லல ..... எனக்கு என்ன வேணும் என்ன புடிக்கும், இப்படி எல்லா விஷயத்தையும் நான் கேக்காமலே செஞ்சு தர்ற அப்பா, அம்மா , அக்கா ,அண்ணன் இவர்களை எல்லாம் காயப்படுத்துற இந்த காதல் எனக்கு வேணாம்னு தோணுதுமா" .
"ஏண்டி இப்படி ? அவங்க ஒத்துப்பாங்க,, உன் மேல அவ்வளவு பாசம் வச்சிருக்காங்க" . என்றாள் கீதா .
"என்மேல இருக்குற பாசத்தினால் ஒத்துப்பாங்களா இருக்கலாம் . ஆனா அது அவங்களுக்கு முழு சந்தோஷத்தை கொடுக்காது . என்மேல் அவங்க வச்சிருக்குற நம்பிக்கையை தூளாக்கிடும்" என்று கண்ணில் நீர் சொட்ட சொல்லிவிட்டு நகர்ந்தாள் அனு ..
அணுவின் மனதில் இனம் புரியாத சந்தோஷவும், கர்வவும் இருந்தது . உன் நம்பிக்கையை காப்பாத்திடுவேன் அப்பா . இனி படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவேன் அப்பா . என்று மனத்துக்குள்ளவே சத்யம் செய்து அடுத்த பஸ்சிலேறி வீட்டுக்கு பயணமானாள்.