தெரு நாய்கள்

அந்தத் தனி வீட்டிலிருந்து வெளி வந்த பெண்மணி, கையில் இருந்த பாத்திரத்தில் இருந்த சாதத்ததை, தெருவைக் கடந்து சென்று, எதிர்ப் புறத்தில் ஒரு மூலையில் ஒரு கல்லின் மேல் இட்டாள்...

உடன் அருகில் இருந்த ஒரு கருப்பு நாய் ஒடி வந்து சாப்பிடத் துவங்கியது... இதை எப்படி உணர்ந்தது என்று தெரியவில்லை, இன்னும் ஒரு கருப்பு நாய் தெருக் கோடியில் இருந்து ஓடி வந்தது... சாப்பிட்டுக் கொண்டிருந்த நாய் வழிவிட்டு சற்று தள்ளிச் சென்றது... கருப்பு நாய் சாப்பிடத் துவங்கியது...
இரண்டு வெள்ளை நாய்கள் ஒதுங்கி நின்ற கருப்பு நாயிடம் நட்பாக வந்து பேசிக் கொண்டிருந்தன...

அந்தக் கருப்பு நாய் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது...

ஒரு இருபது அடி தொலைவில் ஒரு பிரவுன் நிற நாய் இதைப் பார்த்துக் கொண்டிருந்தது... கருப்பு நாய் வெகு நேரம் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு, நமக்கு கிடைக்காதோ என்று, இன்னும் பத்தடி தூரம் அகன்று சென்றது... முப்பதடி தூரத்திலிருந்து ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.

வெகு நேரத்திற்குப் பிறகு அந்த கருப்பு நாய் வழிவிட, அந்த வெள்ளை நாய்களில் ஒன்று சாப்பிடச் சென்றது....

இன்னும் ஒரு வெள்ளை நாய் சாப்பிட வேண்டும்....

அந்த பிரவுன் நாய்க்கு கிடைத்ததா என்று தெரியவில்லை....

நான் வந்து விட்டேன்....
--- முரளி

எழுதியவர் : முரளி (1-Mar-17, 7:07 pm)
சேர்த்தது : முரளி
Tanglish : theru naykal
பார்வை : 265

மேலே