சொல்ல சொல்ல இனிக்குதடி

காதலி
கேட்டால்
என்னை பற்றி
ஹைக்கூ கவிதை
கூறுங்கள் என்று.

உன் விழிகள்
ராமபானமா
சோமபானமா.

புருவங்கள்
வளர் பிறையா,
தேய்பிறையா.

கன்னங்கள்
மது கிண்ணங்களா,
புத்தம் புது சொர்ணங்களா.

இதழ்
வரிகளை படிக்கவா,
வரிகளை பதிக்கவா.

கூந்தல்
மலர் பந்தலா ,
மழை மேகமா.

செவிகள்
காதணியின் ஊஞ்சலா,
காதலனின் கொஞ்சலா.

கழுத்து
வெண்சங்கு வெளுப்பா,
கண்ணதாசன் எழுத்தா.

.................
பனி மூடிய மலையோ,
வாடிவாசல் காளையோ.

இடை
இளைப்பாற இருக்கையோ,
இளநீர் பொய்கையோ.

கரங்கள்
அழைக்க வருமோ ,
அணைக்க வருமோ

மையம்
போதும் என்ற புள்ளியோ,
போதை ஏற்றும் பள்ளியோ.

.........
உயிரோட்டமா,
உணர்வோட்டமா.

..........
கண்ணதாசன் சொல்லில் வைத்ததா,
ஸ்ரீனிவாசன் சொல்ல வைத்ததா.

பாதம்
என் பாதை வந்தது போனதா,
என் பாதை மாற்ற போகுதா.

பின்
தலையணையா,
தளும்பும் பானையா.

உனக்குள்
எத்தனை
ஹைக்கூ.

மெய்யாக கூருகிறேன்,
மேயாமல் எழுதுகிறேன்.


.

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (2-Mar-17, 12:11 pm)
பார்வை : 110

மேலே