வெளிச்ச விதைகள் நூல் ஆசிரியர் கவிஞர் இரா இரவி நூல் மதிப்புரை கவிஞர் முனைவர் ஆ மணிவண்ணன் உதவி ஆணையர் காவல்துறை
![](https://eluthu.com/images/loading.gif)
வெளிச்ச விதைகள் !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் மதிப்புரை கவிஞர் முனைவர் ஆ .மணிவண்ணன் ( உதவி ஆணையர் காவல்துறை )
வெளியீடு ; வானதி பதிப்பகம்.
பக்கம் .190 விலை ரூபாய் 120
23. தினதயாளு தெரு
தியாகராயர் நகர்
சென்னை 600 017.
பேச 044- 24342810 / 24310769
சங்கம் கண்ட மதுரையின் காமராசர் பல்கலைக்கழக மேனாள் தகைசால் தமிழ் பேராசிரியர் இரா.மோகன் அவர்களது தமிழ் குருகுலத்தில் நான்,இக்கவிதை நூல் ஆசிரியர் என் கெழுதகை இலக்கிய நண்பர் இரா ரவி R Ravi Ravi மற்றும் பலர் மாணவராகப் பயின்று வருகின்றோம்.
அதில் இரா.ரவி அனுக்கத் தொண்டர்.
தமிழக அரசின் சுற்றுலாத்துறையில் மாவட்ட உதவி அலுவலராகப் பணியாற்றி வருகின்றார்.
பெரியார் பெருந்தொண்டர்.
பணி நேரம் தவிர்த்து இதர நேரமெல்லாம் முழு இலக்கிய வாதி,தமிழ்த் தொண்டர்.
இந்நூல் இவர் இயற்றிய 16 வது நூல். அறிமுகத்தை இன்னும் விரிவாக்கலாம்.
கவிதைகள் உதித்த பின்பு அவற்றை எழுதி விட்டு தலைப்புகள் இடுவது என்னைப் போன்ற ஒரு சிலர்.
தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து கவிதைகளை உருவாக்குதல் மற்றொரு முறை. இந்த நூலை அந்த வகையில் தான் அமைந்திருப்பார் எனத் தெரிகின்றது.
16 நூலையும் படித்த ரசிகர்கள் என்னைப் போன்று ஒரு சிலரே இருக்க வாய்ப்பு.
புகழ்மிக்க சென்னை வானதி பதிப்பகம் வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளது.
சான்றோர் இல்லத்து அலமாரி மற்றும் சாமானியன் மடியில் ஒரு சேர இந்நூல் அணி சேர்க்கும்.
நன்றி,வாங்கிப் படித்து பயனடையுங்கள்.என் நண்பரின் நூல். நன்றி.
--