கேள்விகளும், பதில்களும்
விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இங்கு கேள்விகளும், பதில்களும் தொகுக்கப்பட்டிருக்கின்றன...
படித்துவிட்டு தங்களுடைய கருத்துகளை பதிவு செய்யுங்கள்....
கேள்வி:- தமிழில் அரிய பல சிந்தனைகளை எழுதுகிறீர்களே. நீங்களென்ன தமிழ் எழுத்தாளரா அல்லது சிந்தனையாளரா??
பதில்:- சிந்திப்பதாலே சிந்தனையாளர் என்பார்கள்.
சிந்திப்பதை எழுதுவதாலே எழுத்தாளர் என்பார்கள்.
இரண்டில் எப்படி நீங்கள் அழைத்தாலும் பொருந்தலாம்.
யாரும் அறியாததை நான் எழுதவில்லை. சிந்திக்கவில்லை..
கேள்வி:- நீங்கள் கவிதைகள், சிந்தனைகள், கட்டுரைகள், கதைகள் மட்டுமல்லாமல் நல்ல பாடலும் எழுதுவீர்களாமே...
உண்மையாகவா??...
பதில்:- சந்தமும் நானறியேன்.
சங்கீதமும் நானறியேன்..
ஆனால், நல்ல சங்கதிகளை நான் சொல்லுவேன்...
அது பாடலாவதும், கவிதையாவதும், சிந்தனையாவதும், கதைகளாவதும், கட்டுரையாவதும் எம் தமிழ்த்தாயின் மகிமையே....
கேள்வி:- உங்கள் இயற்பெயர் என்ன??
பதில்:- மனிதன் என்பதே எனது இயற்பெயர்...
ஆனால், என்னைக் காணும் பலரும் பலவாறு பெயர்களை உச்சரித்தே அழைப்பர்....
கேள்வி:- உங்கள் சொந்த ஊர் எது??
பதில்:- யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பர்..
இந்த உலகமே எனது ஊர்...
இந்த ஊரைவிட்டு வெளியூர் செல்லும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை..
கிடைத்தால் எல்லையற்ற பரந்த அண்டவெளியெல்லாம் சுற்றித் திரிந்து கால்பதித்துவிட்டே திரும்புவேன்....
கேள்வி:- தங்களின் எழுத்துகள் அதிகமாக ஆண்களை மட்டுமே குற்றம், குறை கூறுவதாக இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே.
அதற்கு தங்களின் விளக்கமென்ன???...
பதில்:- குற்றம், குறை கூறி எழுதுவேன். அவ்வாறு எழுதுவது ஆண்களையோ, பெண்களையோ தனித்து உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசுவதற்காக அல்ல...
யாரை விமர்சிக்கிறேன்?
குற்றவாளிகளைத் தானே விமர்சிக்கிறேன்...
கேள்வி:- நீங்கள் ஏன் மற்ற கவிஞர்களைப் போல இரசனைக்குரிய கவிதைகள் எழுதுவதில்லை??....
பதில்:- ஏனென்றால் நான் கவிஞனே அல்ல...
சிந்தனை வழியே நல்ல உணர்வுகளை எழுதும் மனிதன் என்பதே உண்மை....
கேள்வி:- எல்லா மனிதர்களும் ஏன் அறிவாளிகளாக இருப்பதில்லை??....
பதில்:- எல்லா மனிதர்களும் சிந்திப்பதில்லை..
மூளையின் சிந்திக்கும் திறனைப் பயன்படுத்துவதில்லை..
மனிதர்கள் எதைப் பயன்படுத்துவதில்லையோ அதை இழந்துவிடுகிறார்களென்ற கூற்றிற்கேற்ப சிந்திக்கும் திறனை இழந்துவிடுவதால் எல்லா மனிதர்களும் அறிவாளிகளாக இருப்பதில்லை....
கேள்வி:- தங்களுடைய நோக்கம் நல்லதொரு மனித சமுதாயம் உருவாக்குவதே என்று பலமுறை தங்கள் எழுத்துகளில் எழுதியிருக்கிறீர்கள்...
அதை நிறைவேற்ற என்ன செய்யப் போகிறீர்கள்??....
பதில்:- மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப் போகிறேன்..
அனைவரும் சிந்தித்து சக உயிர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்துக் கொள்ளுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தப் போகிறேன்...
கேள்வி:- உங்களுக்கு அரசியலுக்கு வர விரும்பம் உள்ளதா??...
பதில்:- கட்சிகளையும், பதவிகளையும் விரும்பவில்லை. ஆனால், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசியலை ஒரு ஆயுதமாக உபயோகிப்பேன் மக்களே என்னை விரும்பி வாக்களித்துத் தேர்ந்தெடுத்தால்....
கேள்வி:- சினிமாவில் விருப்பமுண்டா? நடிக்க வருவீர்களா??
பதில்:- எனக்கு நடிப்பு வராது..
ஆதலால், சினிமாவில் நானாகவே பிரவேசிப்பேன்..
உண்மையான வாழ்க்கை முறை, பண்பாடு, கலாச்சாரம், காதல்நெறி, யாவற்றையும் சிறப்புற மக்களின் மனதில் நிலை நாட்டுவேன்...
ஏனெனில் நானறிவேன் சினிமாவே மக்களை மாற்றும் மகாசக்தியென்று....
கேள்வி:- நீங்கள் ஒரு பொறியியல் மாணவர். ஆனால், தங்களுடைய பேச்சிலோ, செயலிலோ பொறியியல் மாணவர் என்ற எந்த அடையாளமும் தெரியவில்லையே.. ஏன்???...
பதில்:- நான் பொறியியல் படிக்கிறேன்..
நான் மாணவன் என்பது வகுப்பறையில் மட்டுமே...
அதைவிட்டு வெளியில் வந்தால் சமுதாயத்தில் நான் யார்???...
நான் ஒரு மனிதன்..
சக மனிதனில் காணப்படும் மூடநம்பிக்கை, அறியாமை போன்றவற்றால் ஏற்படும் கஷ்டங்களையும் கொடுமைகளையும் கண்டு அமைதியாக எனக்கென்ன என்று செல்ல முடியவில்லை...
நான் எனது பொறியியல் படிப்பில் எனது கவனத்தைச் செலுத்தியிருந்தால் என்னால் ஒரு சிறந்த இன்சினியராக முடியும்...
அதனால், மற்றவருக்கென்ன பயன்???..
நானும் மற்றவர்களைப் போல பணமே வாழ்க்கையென்று எங்காவது தொழிற்நுட்பங்களின் பேரில் ஏமாற்றிக் கொண்டிருப்பேன்...
அதனால் தான் பொறியியலில் முடங்கிக் கிடக்காமல், சமூகவியலில் குறிப்பாக மனித மனவியலில் கவனம் செலுத்தி வருகிறேன்....
கேள்வி:- இன்றைய கலி முற்றிய காலத்தில் உங்களுடைய நற்சிந்தனைகளையும் கருத்துகளையும் மனிதர்கள் ஏற்றுக்கொள்வார்களா??...
பதில்:- எல்லா மனிதர்களிடமும் இயற்கையாகவே மனச்சாட்சி, நீதி, பகுத்தறிவு போன்ற உயர் பண்புகளெல்லாம் படைக்கப்பட்டிருக்கின்றன...
அவையெல்லாம் விழித்தெழும் போது நிச்சயமாக ஏற்றுக் கொள்வார்கள்....
கேள்வி:- உங்களுடைய முதல் குரு யார்?.
பதில்:- எனது முதல் குரு எனது தந்தையே...
அதே நேரத்தில் எனது முதல் நண்பரும் எனது தந்தையே....
கேள்வி:- உண்மைக்காதல் எவ்வாறிருக்கும்?...
பதில்:- சேர்ந்து வாழ்வதோடு மட்டுமல்லாமல் மரணத்திலும் கூட சேர்ந்தே செல்லும்...
கேள்வி:- தீவிரவாதத்தின் பின்னணி என்னவாக இருக்கும்???...
பதில்:- தீவிரவாதத்தின் பின்னணிகளாக சாதி, மதம், பணம், வறுமை, நாடு போன்ற பல உள்ளன...
தீவிரவாதம் என்றாலே அறியாமையால் நிரம்பிய அறிவாளித்தனமான செயல்பாடு எனலாம்...
மற்றவர்களை அடக்கியாளும் எண்ணமே வன்முறை மற்றும் தீவிரவாதத்தின் தொடக்கமாகவும் அடித்தளமாகவும் அமைகிறது..
கேள்வி:- ஆன்மிகம் குறித்து தங்களுடைய கருத்து யாது?...
பதில்:- மனிதன் தனது ஆன்மா பற்றி அறிந்து, உணர்ந்து, ஆன்மாவாக அன்போடு வாழ்வதற்கு வழிகாட்டுவதே ஆன்மிகமாகும்..
மற்றதெல்லாம் வெறும் மூடநம்பிக்கைகளே...
கேள்வி:- நாத்திகம் என்றால் என்ன??...
பதில்:- ஆன்மிகம் + அறிவியல் = நாத்திகம்....
கேள்வி:- முடிவாகத் தாங்கள் சொல்ல விரும்புவது என்ன???
பதில்:- வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன்...