யாதுமாகிப் போனாய் - ஒரு விகற்ப இன்னிசை வெண்பாக்கள்
யாதுமாகிப் போனாய் - ஒரு விகற்ப இன்னிசை வெண்பாக்கள்
யாதுமாகி நிற்கின்றாய் யாவர்க்கும் இன்பத்தைத்
தூதுமாகித் தந்திடுவாய்த் துன்பங்கள் போக்கிடுவாய்
சாதுவாகிப் பார்க்கின்றான் சான்றாக காட்டிடுவாய் .
மாதுவுனைப் பற்றிடுவேன் மண் .
மண்ணுலம் உள்ளவரை மங்காது நம்காதல்
தண்ணொளியை யாதுமாகித் தந்திடும் பாதகத்தி
விண்ணுலகம் சென்றாலும் விட்டிடவும் கூடுமோ
கண்களிலே நீதானே கண் .
கண்பட்டு விட்டதுவோ காரிகையே உன்மேலே !
எண்ணத்தில் நீயடி ஏற்றமாய் நிற்கின்றாய்
வண்ணமிகு பெண்ணழகே ! வாசமிகு மல்லிகையே !
உண்ணுசுவை யாதுமாகி உண்.
புன்னகை செய்திடும் பூவே அழகிய
உன்னிதழ் சிந்திடும் உன்னதச் சொல்லினால்
என்னிதயம் வாழுமடி என்னவளே நீதானே
சின்னவள் முத்தாய்ச் சிரிப்பு .
தீயாகிச் சுட்டெரிக்கும் தீண்டத் துடிக்குமினி
மாயங்கள் செய்தானோ மாற்ற முடியாமல்
காயத்தால் நேரமும் காத்திருந்து கொல்லவும்
பாயதனில் தூக்கம் பறந்து.
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்