விலைமதிப்பில்லாதவைகள் -

விலைமதிப்பில்லாதவைகள்

டெக்னாலஜி யின் உச்சக்கட்டம் கேட்பதையெல்லாம் அடுத்தடுத்துக் கொடுத்துவிடுகிறது, டிஜிட்டல் ஆல்பம் ஆனால் இவைகளுக்கு ஆயுள் அவ்வளவு இல்லை என்றே சொல்லலாம், நிழற்படவியால் எப்போதோ க்ளிக்கிவிட்டு அந்த மென்படலத்தை டெவெலப் செய்து பிரதி எடுத்துவைக்கும் நிழற்படங்களை ஏதோ ஒரு நோட்டுப்புத்தகத்திற்குள்ளோ , ஏதோ சில பைகளுக்குள்ளோ, அங்கெங்கேயோ வைத்த இடம் மறந்திருப்போம், நீண்டகாலம் கழித்து வீட்டை, பரண்களை சுத்தம் செய்யும் போது அவை நம் கையில் கிடைக்கும்போது , பழஞ்சம் போட்டோக்கள் நிறம் அற்பம் தோய்ந்த நிலையில் காட்சிப்படும்போது, நாம் நம்மை, நம்மைச்சுற்றி இருந்தவர்களை அங்கே காணும்போது அந்த உறவுகள் நட்புகள் காதல் என எல்லாம் நம்மில் அருகிருக்காது, அந்த உறவுகளை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள வேண்டுமாய் சொல்லும், அந்நொடி புத்துயிர்ப்பெரும் நம் உணர்வுகள் , இவற்றையெல்லாம் இன்றைய டெக்னாலஜியால் தரவே தரமுடியாது

வைத்த இடத்தை மறந்துவிட்டு பின்னொருநாளில் அந்த பொருள் கையில் கிடைக்கிறப்போ அந்த பொருளை அத்தனை நாள் நமக்கறியாமலேயே நாம் இழந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை

எழுதியவர் : அனுசரன் (6-Mar-17, 2:13 pm)
பார்வை : 87

மேலே