அவளறியாமல்

முகில் அணிந்த வண்ணத்தைச்
சற்றே தொலைவில் கண்டு
நனைந்து விடுவோமோ என்றெண்ணி
நேர்காணும் அச்சம் கொண்டு
கூட்டில் ஒளிந்து மழையைக்
கண்டுகளிக்கும் சிட்டுக்குருவியாய்...
அவள் அணிந்து வந்த உடையின்
அழகான வண்ணத்தைக் கொண்டு
அவளென்றே என்றே நான் கண்டு
ஒளிந்திருந்தே என்னவளைக் கண்களால்
அவளறியாமல் கண்டுகளிக்கும் நான்...