என் சொந்தம்
உன் உருவம் அழகு
உன் மொழி அழகு
கயல் விழி அழகு
கிளி அதரம் செந்நிற அழகு
உன்னதரம் இங்கே
பொன்னிற அழகு
மயில் தோகை தைத்தது
உன் தேகம்
உன்னைக் கண்டதும் என்னில்
பெய்தது மழை மேகம்
நம்மை இணைத்தது அன்பின் பாலம்
பாசம் என்பதே நமது மூலம்
எல்லை நிர்ணயம் உள்ளதோ
ஆகாய நீளம்
உயிர் உடலில் உள்ளதோ
அது வரை நம் சொந்தம் நீளும்
ஆக்கம்
அஷ்றப் அலி