திருமணநாளின்று

மனதில் நின்றவளை
மணந்த நாளின்று
நம் திருமணநாளின்று

முதல் பார்வையில்
முழு பரிமாற்றம்

அழகிய சிரிப்பில் ஆட்கொண்டாய்
கூந்தல் அழகால் குடிபுகுந்தாய்

உன் சகோதரி மனவிழாவில் தொடங்கிய
நம் காதல் திருவிழா
மணமக்கள் பொருத்தம் பார்த்த மனங்கள்
நம் பொருத்தமும் கண்டது

விதியின் வழியே இடைவெளி
நான்காண்டு இடைவெளி
நட்சத்திரங்கள் பல ரசித்தவன் நான்
நிலவென நீ வந்தாய்
அன்பாய் ஆர்பரித்தாய்
என்னை அபகரித்தாய்

மணமுடிக்க மனம் கொண்டோம்
தடைகள் பல தகர்த்தோம்
காதல் கரம் பற்றி
மணவறை கண்டோம்
வருட முடிவில் நம்
மகனையும் கண்டோம்

ஊடலோடு காதலும்
காதலோடு ஊடலும்
காதலில் முறையே

உன் வார்த்தைகள் நீள
வென்று விடுவேன்
உன் மௌனம் காண
துவந்து விழுவேன்

என் கோபத்தின் நீளம்
உனக்கே விளங்கும்
உன் திமிரின் தீரம்
எனக்கே விளங்கும்

நீ கலங்கிட
என் கணையமும் கருகும்
என் கர்வமும் தகரும்

நான் உன்னை மட்டும்
ரசிப்பேன் என்று
இறுமாப்பு கொள்ளாதே
உன்னை போல்
உன் சமையலையும்
ரசித்து ருசிப்பவன்தான் நான்

உன் நொடி அசைவுகளும் புரியும்
உன் காதலும் உன் கனவும் தெரியும்

காலங்கள் கடந்தாலும்
கம்பூன்றி நின்றாலும்
சிறு ஊடலோடு
என் உயிர் காதலும்
உன்னை மெல்ல வருடும்

சரிபாதி நீதான் - என்
சகியும் நீதான்

எழுதியவர் : ஜெகன். ரா. தி (6-Mar-17, 5:56 pm)
பார்வை : 859

மேலே